EXCO Kemajuan Desa, Perpaduan dan Pengguna Datuk Rizam Ismail menjawab soalan ketika sidang Dewan Negeri Selangor di Shah Alam pada 17 November 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நட்புறவுத் திட்டம் அடுத்தாண்டு மத்தியில் இலக்கவியல் மயமாக்கப்படும்

ஷா ஆலம், நவ 17- அடுத்த ஆண்டு மத்தியில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் நட்புறவு  திட்டத்தை முழுவதுமாக இலக்கவியல்மயமாக்க  மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

அந்த  திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இவ்வாண்டு அதிகரித்ததைத் தொடர்ந்து சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக  பணி செயல்முறையை தானியங்கி முறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று சமூக நலத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் அனஃபால் சாஹ்ரி  கூறினார்.

நட்புறவுத்  திட்டத்தை இலக்கவியல்மயமாக்குவதன் மூலம்  விண்ணப்பதாரர்கள், வாரிசுகள் அல்லது சேவை மையங்கள், கைப்பேசிகள் அல்லது மடிக்கணினிகள் மூலம் பற்றுச் சீட்டு விண்ணப்பங்கள் உள்ளிட்ட பணிகளை இயங்கலை வாயிலாக  மேற்கொள்ளலாம் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் இன்று  2024ஆம் ஆண்டிற்கான விநியோக மசோதாவின் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில்  அவர் இவ்வாறு கூறினார்.

நட்புறவுத் திட்டங்களை இலக்கவியல்  திட்டம் இணைய வசதி இல்லாத முதியவர்கள் மற்றும் கிராமப்புற குடியிருப்பாளர்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கூற்றையும் அன்ஃபால் மறுத்தார்.

கோவிட்-19 தொற்றுநோய் பரவலின் போது அறிமுகப்படுத்தப்பட்ட செலங்கா செயலியை   166,982  மூத்த குடிமக்கள் பயன்படுத்தியதை அவர் சுட்டிக்காட்டினார்.


Pengarang :