ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கெடாவில் வெள்ளம் முழுமையாக  வடிந்துள்ளது, கடைசி இரண்டு தங்குமுகாம் மூடப்பட்டுள்ளது

அலோர்ஸ்ட்டார், 18 நவம்பர்: இரண்டு மாவட்டங்களில் உள்ள ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 26 பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த  கடைசி இரண்டு தற்காலிக மையங்கள் (பிபிஎஸ்) இன்று பிற்பகல் முழுமையாக மூடப்பட்டதால் கெடா வெள்ளத்திலிருந்து முழுமையாக மீண்டுள்ளது.

மலேசியக் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) கெடா மாநில பேரிடர் மேலாண்மை செயலகத்தின் தலைவர்  மேஜர் (PA) முஹம்மது சுஹைமி முகமது ஜைன்,அந்த தங்குமிடங்கள்  PPS முறையே கோத்தாஸ்ட்டார் மற்றும் குபாங் பாசு மாவட்டங்களில் இருந்ததாக கூறினார்.

“கோத்தாஸ்டாரில், கடந்த செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட தித்தி கஜா தேசிய பள்ளி (எஸ்கே) இன்று காலை 10 மணிக்கு மூடப்பட்டது, குபாங் பாசுவில், பிபிஎஸ் எஸ்கே மலாவ் ​ மதியம் 1 மணிக்கு  மூடப் பட்டது,” என்று அவர் இன்று இங்கே ஒரு அறிக்கையில் தெரிவித்தார். .

நல்ல வானிலை காரணமாக வெள்ளம் வடிந்த பிறகு பாதிக்கப்பட்ட அனைவரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.


Pengarang :