ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இ.சி.ஆர்.எல். இரயில் சேவை 2027ஆம் ஆண்டு தொடங்கும்- மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும்

கோலாலம்பூர், நவ 19- கிழக்குக் கரை பயணிகள் இரயில் சேவை
(இ.சி.ஆர்.எல்.) கிளந்தான் மாநிலத்தின் கோத்தா பாரு மற்றும் சிலாங்கூர்
மாநிலத்தின் கோம்பாக் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம்
இடையிலான சேவையை வரும் 2027ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக
தொடங்கும். இந்த இரயில் அதிகப்பட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர்
வேகத்தில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரயில் திட்டத்திற்கான அடிப்படைப் பணிகள், தண்டவாளங்கள்,
சமிக்ஞை முறை உள்ளிட்ட வசதிகள் மணிக்கு 200 கிலோ மீட்டருக்கும்
குறைவாக வேகத்தில் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக
இந்த இ.சி.ஆர்.எல். திட்டத்தின் உரிமையாளரான மலேசியா ரெயில் லிங்க்
சென். பெர்ஹாட் (எம்.ஆர்.எல்.) அறிக்கை ஒன்றில் கூறியது.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்த இ.சி.ஆர்.எல். இரயில் திட்டம்
தொடங்கப்பட்டது முதல் பயணிகளுக்கான துரித இரயில் சேவையை
அடிப்படையாகக் கொண்டு இதன் வடிவமைப்பு மற்றும் அடிப்படை
வசதிகள் உருவாக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அந்நிறுவனம், குறைந்த
பட்சம் மணிக்கு 250 கிலோ மீட்டர் என்ற தர நிர்ணயத்தைக் கொண்டுள்ளது.
அதிவேக இரயில்களுக்கான அடிப்படை வசதிகளை இது கொண்டிருக்க  வில்லை
என்று தெரிவித்த து. இந்த இரயில் திட்டத்தின் பெரும்பகுதி கிழக்கு கரை மாநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்படுகிறது. மிருதுவான நிலப்பகுதி, வெட்டி சமப்படுத்தப்பட்ட
குன்றுகள், அகலமான ஆறுகளின் வழியாக தண்டவாளங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சாய்ந்த வளைவை  அடிப்படையாக கொண்டு இந்த இரயில் தண்டவாளத் திட்டம்   அமல்படுத்தப் பட்டுள்ளது. இது அதிவேக இரயில் திட்டத்திற்கு உகந்தது   அல்ல என்றும் அது விளக்கியது.
இந்த இ.சி.ஆர்.எல். பயணிகளுக்கான துரித இரயில் திட்டமாக மட்டுமே
விளங்கும். இதனை அதிகவே இரயிலாக மாற்றியமைக்கவோ தரம்
உயர்த்தவோ முடியாது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்
என அந்நிறுவனம் தெரிவித்தது.

Pengarang :