ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் தீபாவளி பொது உபசரிப்பில் வசதி குறைந்தவர்கள் பங்கேற்பு

கிள்ளான் நவ 19- கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் இங்குள்ள டேவான் ஹம்சாவில் நடைபெற்ற  தீபாவளி பொது உபசரிப்பில் வசதி குறைந்த தரப்பைச் சேர்ந்த சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.

சமூகத்துடன் அணுக்கமான நடபுறவைப் பேணுவது, மூத்த குடிமக்கள், மாற்றத் திறனாளிகள் மற்றும் சிறார்களுக்கு உதவுவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த விருந்து நிகழ்வு நடத்தப்பட்டதாக  நகராண்மைக் கழகத் தலைவர் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

வசதி குறைந்தவர்களுடன் இணைந்து கொண்டாடும் போதுதான் பெருநாள் கொண்டாட்டம் மேலும் சிறப்பானதாகவும் பொருள பொதிந்ததாகவும் ஆகிறது என அவர் குறிப்பிட்டார்.

இன வேறுபாடின்றி ஒருவரை ஒருவர் மதிக்கவும் பரிவு மதிப்புக் கூறுகளை பகிர்ந்து கொள்ளவும் நகராண்மைக் கழகத்திற்கு இத்தகைய விழாக்கள் வாய்ப்பாக அமைகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற விழாக்கள் முஹிபா உணர்வுடன் நடத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இதன் மூலம்  நகராண்மைக் கழகப் பணியாளர்கள் மற்றும்  பொது மக்களுக்கிடையே  அணுக்கமான நடபுறவை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அவர்,  கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் 23 பிரிவுகளைச் சேர்ந்த 100  பேருக்கு தீபாவளி பண அன்பளிப்பை வழங்கினார்.


Pengarang :