SELANGOR

2025  ஆண்டுக்குள் சிலாங்கூர் முழுமைக்கும் 5ஜி நெட்வொர்க் வசதி

ஷா ஆலம், நவ 21: ஸ்மார்ட் மாநிலம் என்ற அந்தஸ்தை அடைய 2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்துப் பகுதிகளிலும் 5ஜி நெட்வொர்க் இணைய வசதியை வழங்க மாநில அரசு இலக்கு வைத்துள்ளது.

இத்திட்டம் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷன் (MCMC) சிலாங்கூர் இணைந்து சமூகத்தை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியின் மூலம் செயல்படுத்தப்படும் என புதுமை கலாச்சார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

“2023 ஆம் ஆண்டிற்கான 5G நெட்வொர்க் இலக்கு 96.3 சதவிகிதம் மற்றும் தற்போது 94.3 சதவிகிதத்தை எட்டியுள்ளது.

“எம்.சி.எம்.சி சிலாங்கூர் உடன் இணைந்து சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் மாவட்ட பகுதிகளில் அணுகலை வழங்குவதில் கவனம் செலுத்தும், அவை தற்போது 80 சதவீதத்துக்கும் குறைவான அணுகலைப் பதிவு செய்கின்றன” என்று டாக்டர் ஃபஹ்மி கூறினார்.

நேற்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வின் போது செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

அடுத்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் இருந்து உள்ளூர் டிஜிட்டல் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக 35 டிஜிட்டல் பொருளாதார மையங்களை (PEDi) மாநில அரசு கட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இதுவரை 48 மையங்கள் சிலாங்கூரில் இயங்கி வருகின்றன. மேலும் எம்.சி.எம்.சி சிலாங்கூர் மேற்பார்வையின் கீழ் பெட்டாலிங் மற்றும் கிள்ளான் மாவட்டங்களில் 35 மையங்களை உருவாக்குவோம். இது ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு மையம் உள்ளதை உறுதி செய்யும்.

“இந்த மையத்தில், இணைய அணுகல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல், தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் தகவல் தொழில்நுட்ப (ICT) பயிற்சி ஆகியவை உள்ளூர் தொழில்முனைவோர் தங்கள் வணிக நடவடிக்கைகளில் டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்த உதவும்” என்று அவர் கூறினார்.


Pengarang :