SELANGOR

பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்த நிறுவன உரிமையாளருக்கு RM141,000 அபராதம்

கோலாலம்பூர், நவ 21 – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெஞ்ஜானா கெர்ஜெயா 2.0 திட்டத்தின் கீழ் RM140,000 ஊக்கத் தொகையைப் பெறுவதற்காகச் சமூகப் பாதுகாப்பு அமைப்பில் (சொக்சோ) பொய்யான ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக ஐந்து குற்றச் சாட்டுகளில் நிறுவன உரிமையாளர் ஒருவருக்குச் செஷன்ஸ் நீதிமன்றம் RM141,000 அபராதம் விதித்தது.

ஏரா மீடியா எஸ்டிஎன் பிஎச்டியின் உரிமையாளரான லீ ஹாங் ரோங் (24) அபராதத்தைக் கட்டத் தவறினால் 38 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐந்து போலியான பணியாளர் சரிபார்ப்பு படிவங்களை சமூகப் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி ஒருவரிடம் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் “Perusahaan Era Media Sdn Bhd“ என்ற பெயரில் RM140,000 உரிமைகோரலுக்கு சமர்ப்பித்ததாக அந்நபர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர் ஏப்ரல் 23 மற்றும் ஜூன் 4, 2021 க்கு இடையில் கோலாலம்பூர் சொக்சோ அலுவலகத்தில் இக்குற்றங்களைச் செய்துள்ளார். மேலும் குற்றவியல் சட்டத்தின் 471 வது பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

எவ்வாறாயினும், லீ முன்பு எதிர்கொண்ட பொய்யான ஆவணங்கள் தொடர்பான 26 குற்றச்சாட்டுகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 171A இன் கீழ் கவனத்தில் கொள்ளப்பட்டன.

– பெர்னாமா


Pengarang :