ECONOMYMEDIA STATEMENT

ஆரம்ப ஒதுக்கீடு RM1.1 மில்லியன் 22 எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் – மந்திரி புசார்

ஷா ஆலம், நவ. 24: மாநில அரசு 22 மாநில சட்டமன்ற  எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு (ADN) RM1.1 மில்லியன் ஆரம்ப ஒதுக்கீட்டாக   விரைவில்  வழங்கவுள்ளது.

டத்தோ மந்திரி புசார், ஒவ்வொரு எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கும் தல RM 50,000 ஒதுக்கீடு செய்து, சேவை மையம் மற்றும்  அலுவலகத்தினர் தேவைகள் மற்றும் நிர்வாகத்தை வழங்க உதவுவதாக கூறினார்.

“கடந்த காலத்தில் எதிர்க்கட்சிக்கான ஒதுக்கீடு ‘முழுமையான’ எதிர்ப்பு, அரசாங்கத்தை ஆதரிக்கும் , அரசாங்க குழுவில் உள்ள எதிர்க்கட்சி என மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டது.

“இந்த கால ஒதுக்கீட்டிற்கு, மாநில சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை நான் சந்திக்க வேண்டும். நான் வாய்மொழியாக கூறியுள்ளேன் ஆனால் இதுவரை அவர்களிடமிருந்து (எதிர்க்கட்சி) கோரிக்கை வரவில்லை.

“எதிர்க்கட்சி சேவை அலுவலகத்திற்கு நான் தெரிவிக்கிறேன், இந்த ஆண்டு நாங்கள் முதலில் RM 50, 000 ஒதுக்குவோம், இதனால் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் மக்களுக்கு பணியாற்ற வசதியாக இருக்கும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இன்று நடைபெற்ற சிலாங்கூர் மாநில சட்டமன்ற (DNS) அமர்வில் ADN ஒதுக்கீட்டின் அளவை அறிய விரும்பிய செமாந்தா  பிரதிநிதி நூர் நஜன் முகமட் சலேயின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அந்தந்தப் பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் அல்லது குடியிருப்பாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுப் பிரதிநிதிகளுக்கான ஒதுக்கீடு தொகை நிர்ணயிக்கப் படுவதாக அமிருடின் கூறினார்.

“வாக்காளர்களின் எண்ணிக்கை 40,000 க்கும் குறைவாக இருந்தால், RM 750,000 ஒதுக்கீடு செய்யப் படுகிறது, அதே நேரத்தில் 40,001 முதல் 55,000 வாக்காளர்களுக்கு, நாங்கள் RM800,000  ஒதுக்கீட்டை வழங்குகிறோம்.

“மொத்தம் 55,000 முதல் 70,000 வாக்காளர்கள் RM850,000. 70,000 முதல் 90,000 வாக்காளர்கள் உள்ள பகுதிகளுக்கு, நாங்கள் RM900,000 வழங்குகிறோம். மொத்த மக்கள் தொகை 90,000 க்கும் அதிகமாக உள்ளது, நாங்கள் RM950,000 வரை வழங்குகிறோம்,” என்று அவர் கூறினார்.


Pengarang :