EKSKLUSIFMEDIA STATEMENT

எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பு ஒரு நாடகம்- எம் பி

ஷா ஆலம், நவ 25 ;- மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, தற்போதைய சிலாங்கூர் மாநில சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் இறுதி நாளான இன்று மாநில எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆரவாரங்களை கண்டு அவர்களை ” நாடக ராணிகள் ”என்று விவரித்தார்.

பெரிகாத்தான் நேஷனல் (பிஎன்) மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அறிவிக்கப்பட்ட பல தெரிவுக் குழுக்களின் அமைப்பு மற்றும் அவர்கள் முன்மொழிந்த சில பெயர்களை மாற்றுவதற்கான முடிவை எதிர்த்து வெளிநடப்பு செய்வதற்கு முன் கட்டுக்கடங்காத முறையில் செயல்பட்டனர்.

அடுத்து சபையில் மீதமுள்ள உறுப்பினர்களிடம் உரையாற்றிய அவர், எதிர்க் கட்சிகளின் தொடர்ச்சியான முறையற்ற நடத்தை அரசாங்க சார்பு சட்டமன்ற உறுப்பினர்கள்  பழகிக் கொள்ள வேண்டிய ஒன்று என்றார்.

PN சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவுக்குழு உறுப்பினர்களின் அமைப்பு போன்ற அற்பமான விஷயங்களை பெரிது படுத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவதாக கூறினார்.

“ஏன் (இது நடக்கிறது)? ஏனென்றால் மாநில அரசாங்கம் மீது குற்றம் சாட்ட  அவர்களுக்கு,  சிறப்பாக எதுவும் கிடைக்கவில்லை.

“நாம் நமது பணியை பாங்காக புரிய வேண்டும் அவை மாண்பு  காக்கப் படுவதை   நாம் உறுதி செய்துகொள்ள வேண்டும், மேலும் அரசியல் நாடகங்களில் சிக்குவதையும்  தவிர்க்க வேண்டும்  என அரசு சார்பு  சட்டமன்ற  உறுப்பினர்களிடம் கூறினார்.

எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்  நாடக ராணிகளாக மாறுவதற்கு  நாம் வாய்ப்பு அளிக்கக்கூடாது,  மக்களின்  கவனத்தை ஈர்க்க வேண்டும்  என்பதற்காக  நாடக ராணிகள் கட்டும் வேஷங்கள் நமக்கு புதிதல்ல என்றார்.

“அவர்கள் (எதிர்க்கட்சிகள்) அனைவரும் தங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்க வேண்டும், அதுவே  நியாயம் என்று வாதிடுவார்கள், இல்லையெனில் அவர்கள் அநியாயம் என அழுவார்கள்  கதறுவார்கள். இதுதான் இன்று நமது எதிர்க் கட்சிகளின் பிரச்சனை” என்று அமிருடின் கூறினார்.

இன்று வெள்ளிக்கிழமை எதிர்கட்சி உறுப்பினர்கள் நடந்துக் கொண்டதை  மேற்கோள் காட்டி, அனைத்து அரசாங்க சட்டமன்ற உறுப்பினர்களும்,  எதிர்க்கட்சிகளுடன் சண்டையிட வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக எந்தவொரு தாக்குதலுக்கும் மரியாதையுடன் பதிலளிக்கவும் அவர் நினைவூட்டினார்.

“நம்மைக் கொடுமை செய்பவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொண்டால், அவர்கள் வாயில் தீப்பந்தம் வைப்பது போல் ஆகிவிடும் என்று ஒரு  மொழி உண்டு.

“மாநில அரசு தொழில் ரீதியாக செயல்படும், அரசியலில் சிக்காது. மக்களை பாதிக்கும்  பெரிய பிரச்சனைகளை  பற்றி சிந்திக்க வேண்டியது முக்கியம். ம என்று அமிருடின் கூறினார்.

இன்று மாலை, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி தலைமையில் சக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் லாவ் வெங் சான் மற்றும் அரசாங்க பெஞ்ச் ஆகியோர் தெரிவுக் குழுக்கள் அமைப்பது குறித்த முந்தைய ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி கொண்டு  தொடர்ந்து மாநிலங்களவையில் குழப்பம் ஏற்பட்டது.


சில கமிட்டிகளின் அமைப்பு, சபையில் அதிக எண்ணிக்கையிலான PN சட்டமியற்றுபவர்கள் பிரதிபலிக்கவில்லை என்று கூறி, அனைத்து குழுக்களிலும் குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்களாவது இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

 

சில முன்மொழியப்பட்ட பெயர்கள் இறுதிப் பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளதாகவும் அஸ்மின் புகார் தெரிவித்தார்.

இருப்பினும், லாவ் உறுதியாக இருந்தார் மற்றும் உலு  கிள்ளாங் மாநில சட்டமன்ற உறுப்பினருக்கு இந்த விஷயத்தில் இறுதி முடிவு சபாநாயகரிடம் உள்ளது என்பதை நினைவூட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


Pengarang :