ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

திரங்கானுவில் வெள்ளம் தணிகிறது- கிளந்தானில் பாதிப்பு அதிகரிப்பு

கோலாலம்பூர், நவ 25- திரங்கானு மாநிலத்தில் வெள்ளம் நிலைமை சீரடைந்து வருகிறது. வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியிருந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை குறைந்த வேளையில் கிளந்தானில் அந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது.

திரங்கானு மாநிலத்தில் நேற்றிரவு 638 பேராக இருந்த வெள்ள அகதிகளின் எண்ணிக்கை இன்று காலை 486 பேராக குறைந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுவின் செயலகம் கூறியது.

கோல திரங்கானுவில் உள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 273 பேர் தங்கியுள்ள வேளையில் கோல நெருசில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் 62 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.

மேலும், மாராங்கில் உள்ள மூன்று நிவாரண மையங்களில் 124 பேரும் பெசுட்டில் உள்ள ஒரு துயர் துடைப்பு மையத்தில் 27 பேரும் தங்கியுள்ளனர்.

மாநிலத்தின் பல முக்கிய ஆறுகளில் குறைந்து வந்த நீர் மட்டம் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதாக அந்த செயலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிளந்தான் மாநிலத்தில் திறக்கப்பட்டுள்ள இரு துயர் துடைப்பு மையங்களில் 63 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் செயலி தெரிவித்தது.


Pengarang :