ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிள்ளானில் கடல் பெருக்கு அபாயம்- எச்சரிக்கையுடன் இருக்க பொது மக்களுக்கு அறிவுறுத்து

ஷா ஆலம், நவ 27 – இம்மாதம்  25 முதல் டிசம்பர் 1 வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் கடல் பெருக்கின் காரணமாக கவெள்ளம் ஏற்படக் கூடிய அபாயம்  உள்ளதால் அது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு கிள்ளான் வட்டாரத்தில் வசிப்பவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இன்று அங்கு கடல் நீர் மட்டம் 5.2 மீட்டர் வரை உயரும் என எதிர் பார்க்கப்படுவதாக கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலக முகநூல் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை பதிவேற்றிய ஒரு சுருக்கமான அறிக்கையில் கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு கூறியது.

நாளை 5.1 மீட்டர், 5 மீட்டர் (புதன்கிழமை), 4.8 மீட்டர் (வியாழன்) மற்றும் 4.6 மீட்டர் (வெள்ளிக்கிழமை) என  அதிகபட்ச நீர்மட்டத்துடன் இந்த கடல் பெருக்கு அடுத்த சில நாட்களில்  சற்று மேம்படும் என்று அந்த பதிவில் பகிரப்பட்ட விளக்கப்படத்தில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடல் நீர் மட்டம் முறையே 5.1 மீட்டர் மற்றும் 5.2 மீட்டராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு, அனைத்து கிள்ளான் வட்டாரக் குடியிருப்பாளர்களுக்கும் தற்போதைய சுற்றுச்சூழல் நிலைமைகள் குறித்து எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு நினைவூட்டுகிறது.

சம்பந்தப்பட்ட  அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் சமீபத்திய வானிலை தொடர்பான அறிவிப்புகளை அணுக்கமாக கவனித்து வருமாறு  பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Pengarang :