ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாற்றுத் திறனாளி மரணத்திற்கு மருந்தக உதவியாளர் மீது குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி, நவ 29- மாற்றுத் திறனாளியான தன் தங்கையின் மரணத்திற்கு காரணமாக இருந்தாக தனியார் மருத்துவமனை ஒன்றின் உதவி மருந்தகப் பணியாளர் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

மாஜிஸ்திரேட் கைராத்துல் அனிமா ஜெலானி முன்னிலையில் தமக்கெதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அதனைத் புரிந்து கொண்டதற்கு அடையாளமாக நுர் ஷூஹாய்டா முகமது சானி (வயது 36) என்ற அப்பெண் தலையை அசைத்தார்.

இவ்வாண்டு நவம்பர் 6ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் 20ஆம் தேதி காலை 11.30க்குள்  செஸிடென்சி பிரிமா புத்ரி ஜெயா வீடொன்றில் நுர் ஃபாத்தின் முகமது சானி (வயது 29) என்ற மாற்றுத் திறனாளி மரணமடைவதற்கு காரணமாக இருந்ததாக நுர் ஷூஹைய்டா மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்கவும் மரண தண்டனை விதிக்கப்படாத பட்சத்தில் 30 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை மற்றும 12 பிரம்படிகள் வழங்கவும் வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.

அரசுத் தரப்பில் துணைப் பப்ளிக் புரோசிகியூட்டர் அமிருள் ஹலிமி முகமது சாலே இந்த வழக்கை நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் ஜனவரி 31ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.


Pengarang :