ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கெமாமனுக்கான  புதிய நாடாளுமன்ற உறுப்பினரை மக்கள் இன்று தீர்மானிக்க உள்ளனர்

கோலா திரங்கானு, டிச.2 – கெமாமான் நாடாளுமன்றத் தொகுதிக்கு புதிய பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதற்காக மொத்தம் 141,382 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இன்று வாக்களிக்கவுள்ளனர்.

244 வாக்குச்சாவடிகளை  கொண்ட 49 வாக்கு மையங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும், அதன்பின்  அங்காங்கே எண்ணப்படும் வாக்குகள்  சுக்காயில் உள்ள கெமாமன் முனிசிபல் கவுன்சில் டேவான் பெர்லியனுக்கு  கொண்டு செல்லப் பட்டு ஒட்டுமொத்த முடிவு தீர்மாணிக்கப்படும்.

இடைத்தேர்தலில் 70 சதவீதம் வரை வாக்குப்பதிவு இருக்கும் என்று தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே எதிர்பார்க்கிறார், ஆனால் இன்று, நாள் முழுவதும் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது, வானிலை நிலையைப் பொறுத்து  வாக்காளர்கள்  எண்ணிக்கை  அமையும் என்றார் அவர்.

இத்தொகுதியில் 141,790 வாக்காளர்கள் உள்ளனர், இதில் 387 போலீசார், 6 ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் மனைவிகள் மூவர், அத்துடன் 12 வெளிநாட்டு வாக்காளர்கள் உள்ளனர்.
முன்னதாக வாக்களிக்கத் தகுதியுடைய அனைத்து காவல்துறையினரும் இராணுவத்தினரும் தபால் வாக்குகள் மூலம் தங்கள் பொறுப்பை நிறைவேற்றியுள்ளனர், அதே நேரத்தில் இராணுவ வீரர்களின் மூன்று மனைவிகள் நவம்பர் 28 அன்று கிஜல் காவல் நிலையத்தில் முன்கூட்டியே வாக்களித்தனர்.

இடைத்தேர்தலில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் ஓய்வு பெற்ற ஜெனரல்  டான்ஸ்ரீ ராஜா முகமது அஃபாண்டி ராஜா முகமது நூர் மற்றும் PAS ஐ பிரதிநிதித்து  திரங்கானு மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சம்சூரி மொக்தார் ஆகியோருக்கு இடையே நேரடி போட்டி  நிலவுகிறது.

15வது பொதுத் தேர்தலில் (GE15)  ஊழல் காரணமாக PAS வேட்பாளர் சே அலியாஸ் ஹமீட்டின் வெற்றியை ரத்து செய்த செப்டம்பர் 26 அன்று திரங்கானு தேர்தல் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இது நடத்தப்படுகிறது.

கெமாமன் இடைத்தேர்தல் கடந்த ஆண்டு நவம்பர் 19 அன்று நடைபெற்ற  15 பொதுத் தேர்தலை  தொடர்ந்து ஆறாவது இடைத்தேர்தல் ஆகும், முதலாவது ஆகஸ்ட் 12 அன்று கோலா திரங்கானு (பாராளுமன்ற தொகுதி), அதைத் தொடர்ந்து பூலாய் (பாராளுமன்றத் தொகுதி) மற்றும் சிம்பாங் ஜெராம் (மாநிலத் தொகுதி) செப்டம்பர் 9 ஆம் தேதி, பெலங்காய் (மாநிலத் தொகுதி) அக்டோபர் 7 ஆம் தேதி, ஜெபக் (பாராளுமன்றத் தொகுதி) நவம்பர் 4 ஆம் தேதி.
– பெர்னாமா


Pengarang :