Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari menyampaikan ucapan ketika Majlis Rumah Terbuka Deepavali 2023 Parlimen Gombak di Dataran Sungai Tua, Gombak pada 2 Disember 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோம்பாக், சுங்கை துவாவில்  தீபாவளி உபசரிப்பு பல்லின மக்களுடன் கொண்டாடப் பட்டது.

செய்தி. சு சுப்பையா

பத்துமலை.டிச.2-  4 தவணைகளாக  சுங்கை துவாவில் வெற்றி வாகை சூடியதோடு, இம்முறை கோம்பாக் நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றவரும் சிலாங்கூர் மாநில மந்திரி புசாருமான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி, அத்தொகுதி மக்களுக்கு  மகத்தான தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு   வழங்கி  சிறப்பித்தார்.

Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari menyampaikan hadiah cabutan bertuah ketika Majlis Rumah Terbuka Deepavali 2023 Parlimen Gombak di Dataran Sungai Tua, Gombak pada 2 Disember 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI

இந்த சிறப்பு தீபாவளி விருந்து, கலை நிகழ்ச்சியுடன்  கொண்டாடப் பட்டது. குறைந்த 2,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழர் பண்பாட்டு கலை நிகழ்ச்சியுடன் இந்திராணி நாட்டிய பள்ளியை சேர்ந்த நடன மணிகளும் மயில் நடனம் மற்றும் பரத நாட்டியமும் சிறப்பாக படைத்தனர்.

பல்லின மக்களை கொண்ட நம்  நாட்டில் பல்லின மக்களிடையே ஒற்றுமை  மற்றும் சமய நல்லிணக்கம் தொடர்ந்து நிலை நாட்டப் பட வேண்டும் .

Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari menyampaikan duit raya kepada kanak-kanak ketika Majlis Rumah Terbuka Deepavali 2023 Parlimen Gombak di Dataran Sungai Tua, Gombak pada 2 Disember 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI

நாட்டில் நிலவும் ஒற்றுமையை ஒரு தரப்பு சீர் குலைக்க பார்க்கிறது. மலாய்க்காரர்களை மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு ஏதிராக தூண்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளனர் என்று அவர் கடுமையாக சாடினார்.

தீபாவளியைப் போல் அடுத்தாண்டு ஜனவரியில் நடைபெறவிருக்கும் தைப்பூச விழாவை அமைதியாகவும் பாதுகாப்புடனும் கொண்டாட சிலாங்கூர் மாநில அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கும் என்று அவர் உறுதி கூறினார்.

Penari SSR Dance Academy membuat persembahan ketika Majlis Rumah Terbuka Deepavali 2023 Parlimen Gombak di Dataran Sungai Tua, Gombak pada 2 Disember 2023. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI

கடந்த காலங்களை விட தற்போது மாநில அரசும் மத்திய அரசும் நம்பிக்கை கூட்டணி ஆட்சியிள் ஒற்றுமை அரசாக மலர்ந்துள்ளது. முன்பு  சிலாங்கூரின் பல மேம்பாட்டு திட்டங்கள்  பராமுகம்   காட்டப்பட்டது   ஆனால்  இப்பொழுது அமைந்துள்ள  ஒற்றுமை அரசின் வழி  பல  மேம்பாட்டு திட்டங்களை  துரிதப்படுத்த முடியும் என்றார்
சுங்கைத் துவா சட்டமன்ற தொகுதியில் எல்லா மேம்பாட்டு திட்டங்களும் விரைவில் பூர்த்தி செய்யப்படும்..  கம்போங் சுங்கை ஊடாங் வட்டார  மக்கள் பிரச்சனைகள் தீர்வு காணப்பட்டு விட்டது. இதே போல் விரைவில் கம்போங் லக்க்ஷமனா, ஸ்ரீ செலாயாங் ஆகிய பகுதிகளில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.

இருளை அகற்றி உலகிற்கு வெளிச்சம்  வழங்குவதுதான்  தீபாவளி , அதே போல் நாடு கடந்த காலத்தில் எதிர் நோக்கிய எல்லா பிரச்சனைகளையும் வெற்றிகரமாக  களைந்து   விரையில்  நாட்டை  எல்லாத் துறைகளிலும் வெற்றி நடை போட  கொண்டு  செல்வதே  இன்றைய ஒற்றுமை அரசின் தலையாய  குறிக்கோள்  என்று அவர் கூறினார்.

பல்லின மக்களை கொண்ட நம் நாட்டுக்கு ஒற்றுமை மிக அவசியமானது. நமது ஒற்றுமையை சீர் குலைக்க முற்படும் தரப்பினரிடம் விழிப்பாக இருக்கும் படி கேட்டுக் கொண்டார்.


Pengarang :