NATIONAL

அந்நிய நாட்டினருக்கு மானிய விலை சமையல் எண்ணெய் விற்பனை- வணிகர் மீது நடவடிக்கை

ஈப்போ, டிச 5 – பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மானிய விலை சமையல்
எண்ணெயை அந்நிய நாட்டினருக்கு விற்பனை செய்த உள்நாட்டு வணிகர்
ஒருவர் மீது உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு
நடவடிக்கை எடுத்துள்ளது.

சிம்மோர் அருகில் உள்ள டேசா செப்போர் இண்டாவில் உள்ள மளிகைக்
கடையில் அமைச்சின் பேராக் மாநில கிளை நேற்று மேற்கொண்ட
நடவடிக்கையின் போது அந்த பெண் வர்த்தகர் அந்நிய நாட்டினருக்கு
மானிய விலை சமையல் எண்ணெயை விற்பனை செய்வது கண்டு
பிடிக்கப்பட்டது.
அந்த 37 வயது வர்த்தகர் மானிய விலை சமையல் எண்ணெயை
உள்நாட்டினரிடம் அல்லாமல் வெளிநாட்டினருக்கு விற்பனை செய்வதாக
பொது மக்களிடமிருந்து கிடைத்தப் புகாரின் பேரில் நேற்று நண்பகல் 12.00
மணியளவில் திடீர் சோதனை நடத்தப்பட்டதாக அமைச்சின் பேராக் மாநில
இயக்குநர் டத்தோ கமாலுடின் இஸ்மாயில் கூறினார்.

இந்த சோதனையின் போது வாடிக்கையாளர்கள் போல் அந்த கடைக்குச்
சென்ற அமலாக்க அதிகாரிகள் பாக்கெட் சமையல் எண்ணெய் வேண்டும்
எனக் கேட்டுள்ளனர். அந்த சமையல் எண்ணைய் கையிருப்பில் இல்லை
என அந்த பெண் கூறியதைத் தொடர்ந்து சந்தேகத்தின பேரில்
அக்கடையைச் சோதனையிட்ட அதிகாரிகள் கட்டண முகப்பிடத்திற்கு
கீழும கடையின் பின்புறத்திலும் பாக்கெட் சமையல் எண்ணெய் ஐந்து
பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர் என்றார் அவர்.

காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை செயல்படும் அந்த
கடையில் அந்நிய நாட்டிரே அதிகம் பொருள்களை வாங்குவது
சோதனையில் கண்டறியப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த சோதனையின் போது 225 வெள்ளி மதிப்புள்ள 90 ஒரு கிலோ
சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டதோடு சம்பந்தப்பட்ட
வர்த்தகர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்
தெரிவித்தார்.


Pengarang :