ECONOMYMEDIA STATEMENTNATIONAL

உலகில் நிகழும் அனைத்து விதமான ஆயுத வன்முறைகளையும் மலேசியா எதிர்க்கிறது

கோலாலம்பூர், டிச 6-  இன்று உலகின் பல்வேறு இடங்களில் நிகழும் அனைத்து விதமான ஆயுத மோதல்களையும் மலேசியா நிராகரிக்கிறது என்று மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா கூறினார்.

பொது மக்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் மீதான குண்டு வீச்சு தாக்குதல்கள்,  குடிமக்களுக்கான தண்ணீர், மின்சாரம் மற்றும் உணவு விநியோகத் துண்டிப்பு ஆகியவையும் இந்த  வன்முறையில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

இறையாண்மையும் சுதந்திரமும் கொண்ட  நாடு என்ற முறையில் சர்வதேச மனிதாபிமான விதிமுறைகளுக்கு முரணான வன்முறை வடிவங்களை நிராகரிப்பது நமது பொறுப்பாகும்.

பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் துறைகளில் உள்ள தலைவர்கள் உட்பட அனைத்து தலைமைத்துவமும் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் மனிதநேயத்தின் கொள்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இனியும்  இந்தக் கொள்கையைப் பயன்படுத்தாவிட்டால் எதிர்காலத்தில் எந்தவொரு நெருக்கடியும் ஆயுத மோதலில் முடிவடையும், அது அனைத்து வகையான பகுத்தறிவு மனிதநேயத்தையும் புறக்கணிக்கும் என்று நான் கவலைப்படுகிறேன் என்று கூறினார்.

இன்று இங்குள்ள அனைத்துலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மலேசிய தேசிய  தற்காப்பு  பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


Pengarang :