ECONOMYMEDIA STATEMENT

இந்த ஆண்டு MySelல்  மூலம் 700க்கும் மேற்பட்ட அடையாள ஆவண சிக்கல்கள் வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், டிச 6: மாநில அரசின் சிறப்பு பிரிவு MySel மூலம் தனிநபர் அடையாள ஆவண பிரச்சனைகள் (My Sel Unit) ஜனவரி முதல் கடந்த நவம்பர் வரை மொத்தம் 764 சிக்கல்கள் வெற்றிகரமாகத் தீர்க்கப்பட்டன.

பிறப்புச் சான்றிதழ் (196), குடியுரிமை (189), தத்தெடுக்கப்பட்ட குழந்தை (180), சிவப்பு அடையாள அட்டை (175) மற்றும் குடியேற்றம் (24) உள்ளிட்ட ஐந்து வகை வழக்குகள் இதில் அடங்கும் என்று வறுமை ஒழிப்பு சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பா ராய்டு கூறினார்.

“MySel யூனிட் என்பது சிலாங்கூர் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க, குறிப்பாக அடையாள ஆவணங்கள் பெறுவதற்கு  உதவும் மாநில அரசாங்கத்தின் முன்முயற்சி ஆகும்.

“இந்தத் திட்டத்தின் மூலம் அடுத்த தலைமுறையினர் முழுமையான கல்வியைப் பெற்று, வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதன் மூலம் தொடர்ந்து வாழ உதவ முடியும் என்று மாநில அரசு நம்புகிறது,” என்று அவர் கூறினார்.

மக்கள் குடியுரிமை, மைசெல் பாண்டுவின் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை  மாநில தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில், நேற்று தெரிவித்தார்.

அதுப்போன்ற  விவகாரங்களுக்கு உதவியை மாநில தலைமை செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று, நேரடியாக விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

“MySel அதிகாரிகள் இந்த திட்டத்தின் பலன்கள் குறித்து மக்களைச் சென்றடைவது உள்ளிட்ட பல்வேறு விளம்பர முறைகள் செயல்படுத்தி வருகின்றனர்.

 

“சமூக சேவை மையம், கிராம சமூக மேலாண்மை கவுன்சில், உள்ளூர் இந்திய சமூகத் தலைவர் மற்றும் வழிபாட்டு இல்லம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒத்துழைப்பு மற்றும்  விளக்க அறிக்கைகள்  விநியோகிக்கப் படுவதாக, அவர் விளக்கினார்.

 

அடையாள ஆவணங்கள், குடியுரிமை, பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்க சரியான வழிமுறை அல்லது கல்வி  அற்றவர்களுக்கும்,  ஏழைகளுக்கும் உதவும் வகையில் MySEL உருவாக்கப்பட்டது.


பதிவு செய்யப்படாத திருமணங்களால்  போன்றவை குழந்தைகளுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிரச்சினைகள்  எழுவதற்கு  சில காரணம் என்றார் அவர்.


Pengarang :