ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தாமான் செந்தோசா  பண்டார் செந்தோசாவாக  உருமாற்றம் பெறும்.

செய்தி ; சு.சுப்பையா

செந்தோசா.டிச.10-   தாமான் செந்தோசாவை சுற்றி 25 தாமான்கள் உள்ளன. இவை அனைத்தையும் உள்ளடக்கிய பண்டார் செந்தோசாவாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்பது தனது இலக்கு என்று அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

நேற்று செந்தோசா தொகுதியின் ;நடந்த   தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில்   இவ்விழாவை தலைமை ஏற்று நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது தான் செந்தோசா சுற்று வட்டாரப் பகுதியை பண்டார் செந்தோசாவாக தரம் உயர்த்த கடந்த தவணையில் இருந்து தாம் கடுமையாக பாடு பட்டு வருவதாக அவர் கூறினார்.

டத்தோ பண்டாரிடம் தமது கோரிக்கையை வைத்து விட்டார். மேலும் பண்டார் அந்தஸ்து பெற வேண்டிய அனைத்து தகுதிகளும் இப்பகுதியில் உள்ளன. இதனால் விரைவில் தாமான் செந்தோசா பண்டார் செந்தோசாவாக தரம் உயர்த்தப் படும் என்பதை நாம் அனைவரும் எதிர் பார்ப்போம் என அவர் கேட்டுக் கொண்டார்.

தரம் உயர்த்துவதின் வழி இவ்வட்டாரத்தில் உள்ள சொத்துக்களின் விலை உயரும், பொது வசதிகள் மேம்படும், மக்களின் சிந்தனை மாற்றம் பெறும் என்று அவர் கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட தற்போது செந்தோசா வட்டாரம் எல்லா விதத்திலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. முன்பு செந்தோசா என்றால் குற்றவியல் நடக்கும் இடமாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது.

சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு ஏற்ற பிறகு முதன் முதலில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு. குப்பை கூலங்கள் வட்டாரங்கள் சுத்தம் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தினேன்.

தற்போது தாமான் செந்தோசா அமைதி நிலவும் வட்டாரமாக திகழ்கிறது. மேலும் அதிகமான மரங்களை செந்தோசாவில் நட்டு தற்போது பசுமையாக கட்சி அளிக்கிறது. விரைவில் பண்டார் செந்தோசாவாக தரம் உயர்த்துவேன் என்று டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.


Pengarang :