ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ஜப்பான் பிரதமர் கிஷிடாவை சந்திக்க  தோக்கியோவில் உள்ளார் பிரதமர் அன்வார்,

தோக்கியோ, டிச. 16 – ஐந்து நாள் பணிப் பயணமாக வெள்ளிக்கிழமை  தோக்கியோ வந்தடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை சனிக்கிழமை காலை 11 மணியளவில் (உள்ளூர் நேரம்) அலுவலகத்தில் சந்திக்கிறார்.

பிரதம மந்திரி அலுவலகம் மலேசிய ஊடகங்களுடன் இங்கு பகிர்ந்து கொண்ட பயணத்திட்டம், ஜப்பானிய  பிரதமர்  கிஷிதாவை சந்திப்பதற்கு முன், தோக்கியோவின் இம்பீரியல் ஹோட்டலில்,  காலை 10 மணிக்கு மலேசிய தூதுக்குழு உடனான ஆலோசனைக்கு முந்தைய சந்திப்புடன் அன்வாருக்கான பரபரப்பான பல சந்திப்புகள் உள்ளதை  அட்டவணைகள் சுட்டிக்காட்டுகிறது.

இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு, அன்வாரும் கிஷிடாவும் உத்தியோகபூர்வ பாதுகாப்பு   மானிய உதவி மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான விண்வெளி மேம்பாடு மற்றும் பயன்பாடு தொடர்பான ஒத்துழைப்புக்கான குறிப்புகளில் கையெழுத்திடுதல் மற்றும் பரிமாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சசகாவா அமைதி அறக்கட்டளையின் கெளரவத் தலைவரான டான் ஸ்ரீ சசகாவா யோஹேயுடன் மத்திய உணவுக்காக அன்வாரும் தூதுக்குழுவும் மதியம் 12.30 மணிக்கு அதே ஹோட்டலுக்குத் திரும்புவார்கள்.

மதிய உணவுக்குப் பிறகு, மதியம் 2.30 மணிக்கு மூன்று ஜப்பானிய பன்னாட்டு நிறுவனங்களான ரோம் வாகோ, தோஷிபா மற்றும் மிட்சுயி அண்ட் கோ ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் நேரடி சந்திப்பு நடைபெறும்.

மாலை 4.15 மணிக்கு ஜப்பானில் தொழில்துறை தலைவர்களுடன் ஒரு வட்டமேசை கூட்டத்திலும்   அன்வார் தனது மனைவி டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அகாசாகா அரண்மனையில்  உள்ள கெய்ஹின்கானில் இரவு 7 மணிக்கு கிஷிடா மற்றும் மனைவி யூகோ வழங்கும் இரவு உணவுடன் அன்வார் அன்றைய நாளை முடிப்பார்.

இரவு விருந்தில், அன்வருடன் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசன் மற்றும் முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் ஆகிய இரண்டு கேபினட் அமைச்சர்களும் இருப்பார்கள்  என  அறிவிக்கப் பட்டுள்ளது.

– பெர்னாமா


Pengarang :