ECONOMYMEDIA STATEMENTNATIONAL

ப்ரசரானா போக்குவரத்தை பயன்படுத்தும் மாற்றத் திறனாளிகளுக்கு கட்டணமில்லா சேவை- பிப்ரவரி முதல் அமல்

காஜாங், டிச 21- ப்ரசரானா மலேசியா பெர்ஹாட் (ப்ரசரானா) நிறுவனத்தின பொது போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகள் வரும் பிப்ரவரி முதல் தேதி தொடங்கி கட்டணமின்றி பயணிப்பதற்கான வாய்ப்பினைப் பெறுவர்.

கிள்ளான் பள்ளத்தாக்கில் சேவையை மேற்கொள்ளும் எம்.ஆர்.டி., எல்.ஆர்.டி.(இலகு இரயில் சேவை), மோனோ ரயில் மற்றும் ப்ரசரானா நிறுவனத்தினால் இயக்கப்படும் பஸ் தடங்களில் இந்த இலவச பயணச் சலுகை வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

இந்த சேவைக்கான முன்னேற்பாடுகளைக் கவனிப்பது, டிக்கெட் முறையை ஒருங்கிணைப்பது, மாற்றுத் திறனாளி பயணிகளுக்கு சிறப்பு பயண அட்டைகளை வழங்குவது ஆகிய பணிகளை மேற்கொள்ள ப்ரசரானா நிறுவனத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இந்த சேவையைப் பயன்படுத்த விரும்பும் மாற்றுத் திறனாளிகள் சமூக நலத் துறையின் மாற்றுத் திறனாளி அட்டையைக் காட்டி பயணச் சேவைக்கான கார்டை பெற விண்ணப்பிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

தங்களுக்கு கணிசமான நிதிச்சுமை ஏற்படும் என்ற போதிலும் தங்களின் நிறுவன சமூக கடப்பாட்டின் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச கட்டணச் சேவையை வழங்க ப்ரசரானா நிறுவனம் முன்வந்துள்ளது என்று இங்குள்ள காஜாங் ஸ்டேடியம் எம்.ஆர்.டி.நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் சொன்னார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு 50 விழுக்காடு கட்டணக் கழிவை வழங்கும் முந்தைய ஒப்பந்த கார்டு முறை தரம் உயர்த்தப்பட்டு இலவச சேவைத் திட்டமாக மாற்றப்பட்டுள்ளது என்றார் அவர்.


Pengarang :