ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பாசீர் மாஸ் மாவட்டத்தில் 1,314 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோத்தா பாரு, டிச 23 – பாசீர் மாஸ் மாவட்டத்தில்  வெள்ள நிலைமை சீரடையத் தொடங்கியுள்ளது.  நேற்றிரரவு 8 மணி நிலவரப்படி 403 குடும்பங்களைச் சேர்ந்த 1,314 பேர் மட்டுமே தற்காலிக வெள்ள  நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

அவர்களில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் பாரோ பியால் தேசியப் பள்ளியிலும் 222 குடும்பங்களைச் சேர்ந்த 694 பேர் குவால் தோ டே தேசியப் பள்ளியிலும்  106 குடும்பங்களைச் சேர்ந்த 436 பேர்  குவால் பெரியோக் தேசியப் பள்ளியிலும் தங்கியுள்ளனர்.

நேற்று காலை நிலவரப்படி  665 குடும்பங்களைச் சேர்ந்த 2,149 பேர் ஒன்பது நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்திருந்ததாக கிளந்தான் மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.


Pengarang :