MEDIA STATEMENTNATIONAL

போலீசாரின் அதிரச் சோதனையில் 201 பேர் கைது, வெ.15 போதைப் பொருள் பறிமுதல்

கோத்தா பாரு, டிச 26- இம்மாதம் 21ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை கிளந்தான் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த ஓப்ஸ் தாப்பிஸ் நடவடிக்கையில் 201 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 15 லட்சம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையிலான போதைப் பொருள்களைக் கைப்பற்றினர்.

இந்த நடவடிக்கையில் கைது செய்யப்பட் அனைவரும் 18 முதல 68 வயதுக்குட்பட்டவர்கள் எனக் கூறிய கிளந்தான் மாநில துணைப் போலீஸ் தலைவர்  டிசிபி முகமது அலி தம்பி, அவர்களிடமிருந்து யாபா போதை மாத்திரை, கஞ்சா, ஷாபு, சைக்ரோபிக் மாத்திரை, எர்மின் 5 மாத்திரை, கோடின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்ட்டன என்றார்.

நேற்று முன்தினம் மாலை 5.00 மணியளவில் ஜாலான் சாலோர், 5வது மைல், கம்போங் பெண்டேக்கில் உள்ள உணவகம் ஒன்றின் அருகே 29 மற்றும் 36 வயதுடைய இரு ஆடவர்களைக் கைது செய்து அவர்களிடமிருந்து 2,000 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தோம் என்று அவர் சொன்னார்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து பெறப்பட்டத் தகவலின் பேரில் பாசீர் மாஸ், கம்போங் பாடாங் எம்போனில் உள்ள வீடொன்றைச் சோதனையிட்டு மேலும் 30,000 போதை மாத்திரைகளைத் தாங்கள் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்விரு சோதனை நடவடிக்கைகளின் போதும் பறிமுதல் செய்யப்பட்ட 32,000 போதை மாத்திரைகளின் மதிப்பு 197,230 வெள்ளியாகும் என நேற்று இங்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர் கூறினார்.

இக்கைது நடவடிக்கை தொடர்பில் 1952ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின்ன் 39பி பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், கைதான இரு ஆடவர்களும் விசாரணைக்காக வரும் 31ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.


Pengarang :