ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

கிளந்தான் மாநிலத்திற்கு வெ.5 கோடி வெள்ள உதவி நிதி- பிரதமர் அறிவிப்பு

ஷா ஆலம், டிச 28- கிளந்தான் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக தொடக்க உதவி நிதியாக 5 கோடி வெள்ளி வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின (நட்மா) நிதியான இது வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நேரடியாக வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

தற்காலிக  நிவாரண மையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு உதவுவதற்காக நாங்கள் முதல் கட்டமாக 5 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளோம் என்றார் அவர்.

இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக ஒவ்வொரு குடும்பத்திற்கும்  தலா 1,000 வெள்ளி வழங்கப்படும். மேலும், வெள்ளத்தில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு ஏற்ப கூடுதல் உதவி  வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இங்குள்ள லாத்தி தேசிய சமயப் பள்ளியில் தங்கியுள்ள வெள்ள அகதிகளை மந்திரி புசார் டத்தோ முகமது நசாருடினுடன் சென்று கண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை நல்கி வரும் கூட்டரசு அரசு இயந்திரம் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்துக்  கொணடார்.


Pengarang :