MEDIA STATEMENTNATIONAL

கிளானா ஜெயா தவிர இதர பொது பூங்காக்களில் மீன்பிடிக்கத் தடை

ஷா ஆலம், டிச 31- ) கிளானா ஜெயா தாமான் பண்டாரான் பொது  பூங்காவைத் தவிர இதர அனைத்து பூங்காக்களிலும் மீன்பிடிப்பதற்கு  பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம்  (எம்பிபிஜே)  தடை விதித்துள்ளது.

பெட்டாலிங் மாநகர் மன்றத்தின்  2005ஆம் ஆண்டு பொது பூங்கா துணைச் சட்டத்தின் கீழ் இந்த விதிமுறை புதிய ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படுகிறது  என்று மாநகர் மன்றம் கூறியது.

கிளானா ஜெயா  தாமான் பெர்பண்டாரான் பூங்காவில்   மீன்பிடிப்பவர்கள் மாநகர் மன்றத்தின் நில வடிவமைப்புத் துறையிடம் அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

மாதாந்திர அனுமதி அட்டை  ஒவ்வொரு தூண்டிலுக்கும் 30 விலையில் விற்கப்படுகின்றது. அதே நேரத்தில் ஆண்டு அனுமதி அட்டை  ஒவ்வொரு  தூண்டிலுக்கும் 240 வெள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் காலை 7.00  மணி முதல் மாலை 7.00 மணி வரை மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது என்று தனது முகநூல் பதிவில் மாநகர் மன்றம் கூறியது.

பார்வையாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துவதுவதற்கும் தடை விதிக்கப்படுகிறது.


Pengarang :