ECONOMYMEDIA STATEMENTNATIONAL

போலீஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்ட நபரிடம் பெண் குமாஸ்தா வெ.10 லட்சம் இழந்தார்

ஜோகூர் பாரு, டிச 31- போலீஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்ட  ஒரு நபரின் மோசடி வலையில் சிக்கி  பெண் குமாஸ்தா ஒருவர்  10 லட்சத்து 80 ஆயிரம் வெள்ளிக்கும்  அதிகமான தொகையை  இழந்தார்.

தன்னை தொலைபேசி வழி தொடர்பு கொண்டு போலீஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்ட நபரிடம் தாம் ஏமாற்றப்பட்டது தொடர்பில் 45 வயதான உள்ளூர் பெண்மணியிடம் இருந்து  தமது தரப்பு புகாரைப் பெற்றதாக  ஜோகூர் மாநில  காவல்துறை துணைத் தலைவர், துணை ஆணையர் எம். குமார் கூறினார்.

தனியார் நிறுவனத்தில் குமாஸ்தாவாகப் பணிபுரியும்  புகார்தாரர் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் அந்த தொலைபேசி அழைப்பை பெற்றதாக புகாரில் கூறியுள்ளார் அவர் குறிப்பிட்டார்.

போலீஸ் அதிகாரி எனக்கூறிக் கொண்ட அந்நபர் சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் அப்பெண்ணின் வங்கிக் கணக்கு சம்பந்தப்பட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அப்பெண்ணுக்கு உதவுவதாக வாக்குறுதியளித்த அந்நபர், வங்கிக் கணக்கின் விபரங்களை முழுமையாக ஒப்படைக்கும்படி அவரிடம் கோரியுள்ளார்.

போலீசாரின் விசாரணைக்காக   அந்த விவரங்களை அப்பெண் வழங்கியுள்ளார்.  அனைத்து பணத்தையும் அந்த சந்தேகப்  பேர்வழி கொடுத்த வங்கிக் கணக்கிற்கு அப்பெண் மாற்றியுள்ளார் என்றார் அவர் சொன்னார்.

மொத்தம் 1,086,350 வெள்ளித் தொகையை சந்தேக நபரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றிய அப்பெண், அதன் பின்னர் அவ் வாடவரைத் தொடர் கொள்ள இயலாத நிலையில் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.


Pengarang :