EKSKLUSIFMEDIA STATEMENTNATIONAL

கோவிட்-19 அதிகரிப்பின் எதிரொலி- பள்ளிகளில் முகக் கவசம் அணிய ஊக்குவிப்பு

தைப்பிங், ஜன  1 – பள்ளிகள் மற்றும் கல்விக் கூடங்களில்   கோவிட்-19 பரவலைத் தடுப்பது தொடர்பில் கடந்த ஏப்ரல் மாதம் கல்வி அமைச்சு வெளியிட்ட  சீரான செயலாக்க நடைமுறை  (எஸ்.ஓ.பி ) இன்னும் நடைமுறையில் உள்ளது என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ கூறினார்.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முகக் கவசம் அணிவதை  அந்த எஸ்.ஓ.பி. ஊக்குவிக்கும். அதேவேளையில் வோங்  பள்ளி ஊழியர்களுக்கு  நோய் அறிகுறிகள் இருந்தால் சுய-பரிசோதனைகள் செய்ய வேண்டும் என்பதோடு எப்போதும் சுகாதாரத்தையும் பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவதாக அவர் சொன்னார் .

இருப்பினும், கோவிட்-19  விவகாரம் அவ்வப்போது மாறக்கூடும் என்பதை நாங்கள் அறிவோம்.  மேலும் வைரஸ் பரவுவதைத் தடுக்க எங்கள் செயல்முறைகள் அல்லது எஸ்.ஓ.பி. குறித்து கல்வியமைச்சு சுகாதார அமைச்சுடன் எப்போதும் விவாதித்து ஒத்துழைப்பையும் நல்கும் என்று  நேற்றிரவு இங்கு நடைபெற்ற ‘செமாராக் தைப்பிங்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாட்டில் தற்போது கோவிட்19 சம்பவங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்  பள்ளிகளில் கோவிட்-19 பரவினால் அரசாங்கம் எடுக்கவியுக்கும்  நடவடிக்கை குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் கோவிட்-19 கட்டுக்குள் இருப்பதாகவும் அடையாளம் காணப்பட்டச் சம்பவங்களும்  லேசான அறிகுறிகள் மற்றும் மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாத வகையிலும் உள்ளன என்றும் சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கடந்த மாதம்  29ஆம் தேதி வெளியிட்ட ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.

கோவிட்-19 பரவலால்  பாதிக்கப்படும்  பள்ளிகளை  கல்வியமைச்சு தற்காலிகமாக மூடுமா என்று கேட்டதற்கு, ஒவ்வொரு சம்பவத்தையும்  அமைச்சு கவனமாகக் கையாளும் என்றும் நிலைமை தீவிரமானால் மேல் நடவடிக்கை எடுக்க  சுகாதார அமைச்சின் ஆலோசனையைப் பெறும் என்றும் வோங் கூறினார்.


Pengarang :