ECONOMYMEDIA STATEMENTNATIONAL

2023ஆம் ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 600,000 சாலை விபத்துகள் பதிவு

கோலாலம்பூர், ஜன 1- கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 30 வரை நாடு முழுவதும் 598,635 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.

அவற்றில் 12,417 விபத்துகள் மரணத்தை உட்படுத்தியவையாகும் என்று புக்கிட் அமான் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் துணை இயக்குநர் டத்தோ முகமது நஸ்ரி ஓமார் கூறினார்.

மேலும் 2,331 விபத்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு கடுமையான காயங்களும் 28,331 விபத்துகளில் லேசான காயங்களும் ஏற்பட்ட வேளையில் எஞ்சிய விபத்துகளில் வாகனங்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டதாக அவர் சொன்னார்.

புத்தாண்டை முன்னிட்டு இங்குள்ள ஜாலான் டூத்தா டோல் சாவடியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சாலைத் தடுப்புச் சோதனையைப் பார்வையிட்டப்  பின்னர் செய்தியாளர்களிடம் அவர்  இதனைத் தெரிவித்தார்.

அக்காலக்கட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் மிக அதிகமாக 173,129 விபத்துகள் பதிவான வேளையில் அதற்கு அடுத்த நிலையில் ஜோகூரும் (87,370 விபத்துகள்) கோலாலம்பூரும் (72,701 விபத்துகள்) உள்ளன என்றார் அவர்.

அதே சமயம் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையிலும் சிலாங்கூர் மாநிலமே முதலிடம் வகிக்கிறது. இம்மாநிலத்தில் கடந்தாண்டு 2,092 பேர் உயிரிழந்த வேளையில் ஜோகூரில் 2,010 பேரும் பேராக்கில் 1,321 பேரும் பலியாகினர் என்ற அவர் குறிப்பிட்டார்.

புத்தாண்டை முன்னிட்டு மாநில போலீஸ் தலைமையகங்கள் மற்றும் மாவட்ட போலீஸ் தலைமையகங்களின் ஒத்துழைப்டன் நாடு முழுவதும் மாபெரும் சாலைத் தடுப்பு மற்றும்  சாலை  போக்குவரத்து  சோதனையை அமலாக்கத் துறை மேற்கொண்டது


Pengarang :