Suruhanjaya Pencegahan Rasuah Malaysia.
NATIONAL

அரசின் விளம்பர நடவடிக்கைகளுக்கு வெ.70 கோடி செலவு – எம்.ஏ.சி.சி. விசாரணை

கோலாலம்பூர், ஜன 3 – கடந்த 2020 முதல் 2022 வரையில்  இரு பிரதமர்களின் நிர்வாகத்தின் போது அரசாங்கத்தின் சாதனைகளை  விளம்பரப்படுத்துவதற்கும் பிரபலப்படுத்துவதற்கும்  70 கோடி வெள்ளி செலவிடப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளைத் தொடங்கவும் தகவல் சேகரிக்கவும் குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கவும் நிதி அமைச்சு  மற்றும் பிரதமர் துறை ஆகியவற்றுக்கு எம்.ஏ.சி.சி. நேற்று சென்றதாக வட்டாரம்  ஒன்று தெரிவித்தது

கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து விளம்பர நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் எவ்வளவு செலவழித்துள்ளது என்பது குறித்து பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரனின் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அளித்த பதிலின் அடிப்படையில் இந்த  விசாரணை நடத்தப்படுவதாக அது கூறியது.

விளம்பரம் மற்றும் பிரபலப்படுத்தும்  நோக்கங்களுக்காக 70 கோடி வெள்ளி  செலவிடப்பட்டதாகச் சமீபத்தில் வெளியானத் தகவலை  விசாரிப்பதற்கான ஆக்ககரமான முடிவை  எம்.ஏ.சி.சி. எடுத்தது.

கடந்த 2020 முதல் 2022 வரை அச்சு, இலக்கவியல் மற்றும் தொலைக்காட்சி உட்பட அனைத்து ஊடக தளங்களிலும் அரசாங்கத்தின் சாதனைகளைப்  பிரபலப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட விளம்பர நடவடிக்கைகளும் இந்த செலவில் அடங்கும் என்று அந்த வட்டாரம் தெரிவித்தது.

முதற்கட்ட விசாரணையில் பணம் எப்படி செலவிடப்பட்டது என்பது குறித்தும், முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் கண்டறியப்டும் என அது குறிப்பிட்டது.


Pengarang :