ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

2023 இறுதியில் கோவிட்-19 நோய்த் தொற்று 52 விழுக்காடு அதிகரிப்பு

ஜெனிவா, ஜன 6- கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னதாக உலகளவில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை  52  விழுக்காடு அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

முந்தைய 28 நாள் காலக் கட்டத்துடன்  ஒப்பிடுகையில் கடந்த  நவம்பர் 20 மற்றும் டிசம்பர் 17 க்கும் இடையில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது,

உலகளவில் 850,000 புதிய கோவிட்-19 சம்பவங்கள்  பதிவாகியுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பான இறப்புகளின் எண்ணிக்கையும் 8 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று  உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிறிஸ்டியன் லிண்ட்மேயர் ஜெனீவாவில் நடந்த ஐநா செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இக்காலக்கட்டத்தில் கோவிட்19 நோய்த் தொற்று தொடர்புடைய  3,000 புதிய மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அவர் கூறினார்.


Pengarang :