ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பேரிடர் நிவாரணப் பணிகளுக்கு எம்.பி.ஐ. வெ.10 லட்சம் ஒதுக்கீடு

புத்ராஜெயா, ஜன 6-  பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக இவ்வாண்டில் 10 லட்சம் வெள்ளியை எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி பெசார் கழகம்  ஒதுக்கியுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவு, புயல், தீ மற்றும் சாலை விபத்துகள் போன்ற பேரிடர்களில்  பாதிக்கப்படுவோருக்கு இந்த நிதியிலிருந்து உதவிகள் வழங்கப்படும் என்று எம்.பி.ஐ.   நிறுவன சமூகக் கடப்பாடு மற்றும்  தகவல் தொடர்புத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

இந்த உதவி வெள்ளம் போன்ற பேரிடர்களுக்கு மட்டும் அல்லாது சாலை விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக போதிய வருமானம்  இல்லாதவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பல்வேறு வகையான பேரிடர்களுக்கு உதவிகள் கோரி சட்டமன்றத் தொகுதி  சேவை மையங்களிலிருந்தும் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளோம் என்று அவர்  கெடிலான்  கட்சியின் (கெடிலான்) கிழக்கு கடற்கரை மாநிலங்களில் வெள்ளத்திற்குப் பிந்தைய நிவாரணப் பணி நிகழ்வில் சந்தித்தபோது கூறினார்.

உணவு கூடை திட்டத்தை குறிப்பாக பண்டிகை காலங்களில்   வெற்றிகரமாக நடத்துவதற்கு ஏதுவாக  10 லட்சம் வெள்ளியை ஒதுக்குமாறு எம்.பி.ஐ. யிடம் அகமது அஸ்ரி முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தார்.

பேரிடர் நிவாரணம் மட்டுமின்றி, கல்வித் துறை, சமூக நலத்திட்டங்கள், பள்ளிவாசல், சூராவ் மற்றும் யாத்ரீகர்களுக்கான ஊக்கத்தொகை ஆகியவற்றுக்கும்  எம்.பி.ஐ. அதிக அளவில்  நிதி ஒதுக்கீடு செய்கிறது.


Pengarang :