ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பூச்சோங் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் நிறுவப்பட்ட கிட்டத்தட்ட 800  இரும்பு தடுப்புகள்.

ஷா ஆலம், ஜன. 7 – பூச்சோங்கில் தாமான் வவாசன் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் சரிவை வலுப்படுத்தும் பணிகள் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்வதாக கின்ராரா மாநில சட்டமன்ற உறுப்பினர் இங் சீ ஹான்  தெரிவித்தார்.
நேற்று ஒரு பேஸ்புக் பதிவில், நில சரிவு ஒட்டிய நிலத்தின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக 775 இரும்பு பைல்கள்(தடுப்புகள்) வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன.
“மற்றொரு நேர்மறையான முன்னேற்றம் என்னவென்றால், நில சரிவு நேரத்தில் கார் பார்க்கில் நிறுத்தப்பட்டிருந்த எட்டு கார்களும் பாதுகாப்பாக மீட்கப் பட்டு விட்டன.
“ஒப்பந்ததாரர் நிலசரிவை நிரப்பி, நடைமேடை மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அடுத்த சில நாட்களில் பருவமழை வடிகால் அமைக்கும் பணியும் தொடங்கும்,” என்றார்.
முன்னதாக, சுபாங் ஜெயா மேயர் டத்தோ முகமட் ஃபௌசி முகமட் யாதிம், தாமன் வவாசன் பைல்ஸ் நிறுவல் செயல்முறை ஜனவரி 8 ஆம் தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
டிசம்பர் 16 அன்று இரவு சுமார் 7.30 மணியளவில் தாமான் வவாசன்  ஜாலான் வ்வாசன்  3/9 மற்றும் ஜாலான் 3/14 ஆகிய இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவின் விளைவாக பாதுகாப்பு காரணங்களுக்காக  வீடுகளில் இருந்து 29 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
பேரழிவின் விளைவாக நான்கு வாகனங்கள் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்தன, இருப்பினும் உயிர் சேதம் எதுவும் இல்லை.

Pengarang :