ANTARABANGSAECONOMYMEDIA STATEMENT

நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்

ஈப்போ, ஜனவரி 7: புலாவ் பண்டிங், கிரிக், மாட் ஷா ஜெட்டியில் நேற்று ஒன்பது வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இரவு 8.20 மணியளவில் இந்த சம்பவம் தொடர்பாக பொது மக்களிடமிருந்து அவசர அழைப்பு வந்ததையடுத்து, பெர்சியா காவல் நிலையத்தில் இருந்து ஒரு போலீஸ் குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக கிரிக் மாவட்ட காவல் துறைத் தலைவர் சுல்கிஃப்லி மஹ்மூத் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

முதற்கட்ட விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் உடலையும், சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றிலும் வெளிப்புறப் பரிசோதனை மேற்கொள்ள பட்டதாகவும், குற்றத்தின் கூறு எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

பண்டிங் தீவில் பணிபுரியும் 40 வயதான பாதிக்கப் பட்டவரின் தந்தையின் கூற்றுப்படி, நேற்று மாலை 6 மணியளவில் அவரது மகள் பண்டிங் தீவின் படகு துறையின் பக்கத்தில் ஒரு நண்பருடன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தார்.

“பாதிக்கப்பட்டவர் மாலை 6.30 மணியளவில் காணப்படவில்லை, அவர் தனது நண்பர்களுடன் தேட முயன்றார்.

“மாலை 6.50 மணியளவில், அவரது மகள் ஒரு படகுக்கு பின்னால் மாட் ஷா படகு துறைக்கு அருகே  தீவின் ஓரத்தில், சுமார் 6 அடி (1.82 மீட்டர்) ஆழத்தில் மூழ்கி  கிடந்தது  கண்டு பிடிக்கப்பட்டார்.  , உடனடியாக ஜெரிக் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டார்.” என  அவர் சொன்னார்.

ஜெரிக் மருத்துவமனை மருத்துவக் குழுவின் பிரேதப் பரிசோதனையில்  பாதிக்கப்பட்டவரின் மரணத்திற்கான காரணம் நீரில் மூழ்கியது தான் என்பதை உறுதிப்படுத்தியது, மேலும் பரிசோதனையில் வேறு காயங்கள் அல்லது குற்றத்தின் கூறுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று அவர் கூறினார்.


Pengarang :