ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENT

கோலக் கிள்ளானில் கடல் பெருக்கு அபாயம்- பொது மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்து

ஷா ஆலம், ஜன 12- கிள்ளான் துறைமுகக் கடல் பகுதியில் நேற்று தொடங்கி வரும் 15ஆம் தேதி வரை கடல் பெருக்கு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் குறிப்பாக கோலக் கிள்ளான் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.

இம்மாவட்டத்தில் அலைகள் 5.1 மீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் இப்பகுதியில் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக கிள்ளான் மாவட்ட மற்றும் நில அலுவலகம் கூறியது.

மேலும் இன்று அதிகாலை 6.29 மணியளவில் கடலில் நீர் மட்டம் 4.9 மீட்டராகவும் மாலை 7.04 மணிக்கு 5.1 மீட்டராகவும் இருக்கும் என அது தெரிவித்தது.

நாளை சனிக்கிழமை காலை 7.12 மணியளவில் கடல் நீர் மட்டம் 5 மீட்டராகவும் மாலை 7.49 மணிக்கு 5 மீட்டராகவும் இருக்கும் வேளையில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.53 மணிக்கு நீர் மட்டம் 5 மீட்டராகவும் இரவு 8.31 மணிக்கு 5.1 மீட்டராகவும் இருக்கும்

வரும் 15ஆம் தேதி திங்கள்கிழமை இரவு மணி 9.11க்கு கடல் நீர் மட்டம் 5.1 மீட்டர் வரை உயரும் என மாவட்ட அலுவலகம் தெரிவித்தது.

இந்த கடல் பெருக்கு இம்மாதம் 11ஆம் தேதி தொடங்கி 15ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் அது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டது.

இந்த கடல் பெருக்கு அபாயத்தை கருத்தில் கொண்டு கிள்ளான் மாவட்ட மக்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருக்கும் நடப்பு சுற்றுச்சூழல் நிலவரங்களையும் அணுக்காக கவனித்து வர வேண்டும் என அது கேட்டுக் கொண்டது.


Pengarang :