ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் இன்றுவின் தைபொங்கல் வாழ்த்து

தென்னிந்தியர்களின் பூர்வீகம் விவசாயம், அவர்கள் ஆடி மாதத்தில்  விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். இந்த திருநாள் அன்று அனைவரது வீட்டிலும் அந்த அறுவடையில் கிடைத்த புதிய அரிசியை சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையில் இட்டுப் பொங்கல் செய்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது போகிப் பண்டிகை, பொங்களுக்கு பக்குவமான  முது மொழியாக மட்டுமின்றி மனித குலத்திற்கு தேவையான முக்கியமான உபதேசமாகவும் விளங்குவது ” பழையன கழிதலும் புதியன புகுதலும்”’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்பாட்டுக்கு  தடையாகும், வளர்ச்சிப் பாதையில் நடைபோட தடையாக உள்ள எதையும் தவிர்ப்பது நலம்.

 அதாவது மாதத்தின் கடைசி நாளன்று தேவையற்ற பழைய பொருட்களை எரிப்பது  மற்றுமின்றி பழைய சிந்தனைகளையும் தேவையற்ற மன அழுக்கையும் போகியில் போக்கி விட்டு, புதிய பொருட்கள், புதிய எண்ணங்களுடன் பிறக்கும் புதிய மாதமான தையை வரவேற்பது போல்
மலேசிய இந்தியர்கள், புதிய அரசின்  திட்டங்களில் பங்கேற்போம், புதிய வரவுகளையும் வரவேற்ப்போம். வெற்றியை நோக்கி  பயணிப்போம்  என சிலாங்கூர் இன்று  வாழ்த்து கூறுகிறது.

Pengarang :