ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பொங்கல் கொண்டாட்டத்திற்கு கோத்தா அங்கிரிக் தொகுதி வெ.13,000 ஒதுக்கீடு

ஷா ஆலம், ஜன 15-  இந்திய சமூகத்தால் வெகு விமரிசையாக  கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான  பொங்கல் திருநாளுக்காக கோத்தா அங்கிரிக் தொகுதி  13,000 வெள்ளியைச் செலவிட்டுள்ளது.

இப்பெருநாளை முன்னிட்டு  அப்பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு பொங்கல் பானைகள் மற்றும் அடிப்படை உணவுப் பொருட்கள் போன்ற உதவிகள் வழங்கப்பட்டதாக தொகுதி உறுப்பினர் நஜ்வான் ஹலிமி கூறினார்.

இன்று  தொடங்கும் பொங்கல் பண்டிகையை சிறப்பான முறையில்  கொண்டாட இந்த உதவிப் பொருள்கள் அவர்களுக்கு  பேருதவியாக இருக்கும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த உதவி அவர்களுக்கு பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகவும் அமையும் என எதிர்பார்கிறோம்  என்று அவர் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பொங்கல் பண்டிகை என்பது அறுவடைக் காலத்தில் தமிழர்களால் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகையாகும். மேலும் இது விவசாயிகள் கால்நடைகளின் பங்களிப்பை போற்றுவதை நோக்கமாகக் கொண்டது.


Pengarang :