ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில்  பொங்கல்  கோலகலமாக கொண்டாடப்பட்டது.

செய்தி; சு.சுப்பையா

சுபாங்.ஜன.16- சுங்கை பூலோ நாடாளுமன்றத் தொகுதியில் கோலாகலமாக பொங்கல் கொண்டாடப்பட்டது. தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் துணை அமைச்சருமான டத்தோ ரமணனின் தலைமையில் சிறப்பாக ஏற்பாடுகள்   செய்யப்பட்டிருந்தது.

இந்த சிறப்பு பொங்கல் நிகழ்ச்சி ரப்பர் ஆய்வு கழகம் ( ஆர்.ஆர்.ஐ ) தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தலைவர் இராம கிருஷ்ணன் ஏற்பாட்டில் ஆலய வளாகத்தில் நடந்தது. இந்த சிறப்பு பொங்கல் நிகழ்ச்சியில் 200 பேர் கலந்துக் கொண்டனர்.

50 பானையில் பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் வைப்பதற்கு  அனைத்து செலவுகளையும் டத்தோ ரமணன் ஏற்றுக்கொண்டதன்.பொங்கல் வைத்த 50 பெண்களுக்கு  தலா ரி.ம 100.00 பொங்கல்  அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார். மேலும் இந்த சிறப்பு பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட 150 பேருக்கு  ரி.ம 50.00 பொங்கல் பரிசும் வழங்கி சிறப்பித்தார்.

இந்த பொங்கல் நிகழ்ச்சியில் இக்கோவிலின் முன்னாள் தலைவர் பெரியவர் எல்லப்பனும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார். மேலும் டத்தோ ரமணனின் சிறப்பு அதிகாரி டத்தோ அன்புமணி பாலன், சிறப்பு அதிகாரி சேகர், நாடாளுமன்ற தொகுதி சிறப்பு அதிகாரி தமிழ் செல்வம் தம்பதிகள், சீலன்,  நாதன் கிரிஸ்தினா தம்பதிகள், லோகா தம்பதிகள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

சுபாங் வட்டாரத்தில் உள்ள மலிவு விலை வீடமைப்பு பகுதியில் உள்ள இந்தியர்கள் வீடுகளில் பொங்கல் வைத்த 50 குடும்பங்களுக்கு இனிப்பு பலகாரங்கள், கரும்புகள், பொங்கல் பானை மற்றும் பொங்களுக்கான மளிகை பொருட்கள்  வழங்கி சிறப்பித்தார்.  அவர்கள்  அனைவருக்கும் தலா ரி.ம. 50.00 பொங்கல் அன்பளிப்பையும்  வழங்கி  சிறப்பித்தார்.

கடந்த 3 தினங்களாக   பொங்கலை முன்னிட்டு   500 க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகள், பொங்கல் மளிகை பொருட்கள் மற்றும் 4,500 கரும்புகள்  சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள இந்தியர்களுக்கு விநியோகம் செய்யப் பட்டன.

ஆக மொத்தத்தில்   இவ்வாண்டு சுங்கை பூலோ இந்திய மக்களுக்கு குதுகலமான பொங்கலாக  அமைய உதவிய நாடாளுமன்ற உறுப்பினரின்  அன்பளிப்புகளில்  மக்கள் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார் நாதன் கிரிஸ்தினா தம்பதிகள்.


Pengarang :