ECONOMYMEDIA STATEMENTNATIONAL

7 லட்சம் பெறுநர்களுக்கு சாரா 2024 ல்  RM70  கோடி ஒதுக்கீடுகள்

கோலாலம்பூர், ஜன. 20 – இந்த ஆண்டு சும்பங்கன் அசாஸ் ரஹ்மா (சாரா) என்னும்  உதவித் திட்டமானது 7 லட்சம்  பெறுநர்களின் அடிப்படை  தேவைக்கு உதவும் வண்ணம்  RM70 கோடி வெள்ளியை ஒதுக்கிட்டுள்ளது.

கடந்த ஆண்டு RM13 கோடி ஒதுக்கீட்டில்  210,000 பெறுநர்களுடன் ஒப்பிடுகையில்  இவ்வாண்டு  RM70 கோடியாக அதிகரிக்கப்பட்டது என்பது  ஐந்து மடங்கு அதிகரிப்பாகும்..  பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளினால் அதிகம் பாதிக்கப் படுபவர்களை  இலக்காக கொண்டு மானிய உதவியாக ” சாராவை ”மேம்படுத்துவதாக கூறினார்.

“மலேசியப் பொருளாதாரத்தின் மாற்றம் என்பது மிகவும் பாதிக்கப் படக்கூடியவர்களை உயர்த்துவதில் தொடங்குகிறது. சாரா திட்டத்தின் மேம்பாடுகள் சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், மடாணி பொருளாதாரக் கட்டமைப்பு படி ஒரு  அக்கறை மிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கு முதல் படியாகும்,” என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஜனவரி 22 முதல் படிப்படியாக செயல்படுத்தப்படும் சாரா, மலேசியாவின் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது மற்றும் மடாணி பொருளாதார கட்டமைப்பின் அடித்தளமாக செயல்படும் சமத்துவக் கொள்கைக்கு ஏற்ப உள்ளது.

இத் திட்டத்தின் மேம்பாடுகளில், கடந்த ஆண்டு பரம ஏழைகளுடன் ஒப்பிடும்போது, ​​, 2023 இல் RM600 யாக  இருந்த  உதவியை RM1,200 வரை  அதிகரிப்பது,  பரம ஏழைகளிலிருந்து  உதவிகளை  ஏழைகளுக்கும் விரிவுபடுத்துதல்    போன்ற மேம்பாடுகள்  அடங்கும்.

“கடந்த ஆண்டு ”சாரா திட்டம்”  ஊக்கமளிக்கும்  ஆதரவு பெற்றதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 424 ஆக இருந்த (2023 இல்) பங்குபெறும் சில்லறை விற்பனையாளர்கள் நெட்வொர்க்கை (ஜனவரி 17 முதல்) 515 ஆக அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது” என்று அன்வார் கூறினார்.

சாரா திட்டத்தைப் பற்றிய தகவல்களைத் தேடும்போது பொறுப்பற்ற தரப்பினரின் மோசடி வலைதள இணைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் நிதி அமைச்சகம் பெறுநர்களுக்கு நினைவூட்டியது.


Pengarang :