ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில தொழில் முனைவோருக்கான கல்வி B40 பரம ஏழை மற்றும் ஒற்றை தாய்மார்களுக்கு  நம்பிக்கை ஊட்டுகிறது

ஸ்ரீ கெம்பாங்கான், ஜன. 20 – பரம ஏழை  (B 40 குழு) சேர்ந்தவர்கள் மற்றும் ஒற்றை தாய்மார்கள் உட்பட சுமார் 10 பங்கேற்பாளர்கள், வணிக பயிற்சித் திட்டத்தின் குரோ எனப்படும் (Grow) திட்டத்தின் கீழ் தையல் துறையில் ஆறு மாத தொழில் முனைவோர் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவோர் மேம்பாடு (சிந்தம்) நிர்வாக அதிகாரி ஜான் பெர்னாண்டஸ், பாடத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு RM30,000 ஒதுக்க பட்டதாகவும், பாடத் திட்டத்தை முடித்த பிறகு பங்கேற்பாளர்களுக்கு உபகரண உதவிகளை வழங்குவதாகவும் கூறினார்.

“யயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் வழியாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் ஒன்று குரோ (Grow) எனப்படும் திட்டம். இந்தத் திட்டம் வெறும் திறன் படிப்பு மட்டுமல்ல; வணிகத்தில் எப்படி வெற்றி பெறுவது என்பதற்கு ஊக்கத்தையும் நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம்.

“பங்கேற்பாளர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி பயனடைவார்கள், அவர்களின் வாழ்க்கையும், குடும்பங்களையும் மேம்படுத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,  நீங்கள் கற்றுக் கொண்டதைப் பயிற்சி செய்யுங்கள்  என, இன்று சாய் ராணி தையல் மையத்தில் நடந்த குரோவின் நிறைவு விழாவுக்குப் பிறகு  அவர்களுக்கு  ஆலோசனை வழங்கப்பட்டது எனக் கூறினார்.

சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவோர் மேம்பாடு (சித்தம்) வணிகப் பயிற்சித் திட்டத்தில் (Grow) பங்கேற்பாளர் பி. சுகுணா, 39.

பங்கேற்பாளர் பி. சுகுணா, 39, (Grow)க்ரோ தனது சொந்த தையல் கடையைத் திறக்க தன்னம்பிக்கை அளித்துள்ளதாக கூறினார்.
“சும்மா பொழுதுபோக்காக தொடங்கி,  விருபும்போது தையல் தைப்பது, இப்போது  பணமீட்டும் சொந்தத் தொழிலாகும் என்று யார் நினைத்திருப்பார்கள்? எனது நீண்ட நாள் கனவு நனவாகியுள்ளது.

“பாடநெறி முழுவதும், எங்களுக்கு தையல் திறன்கள் கற்பிக்கப்பட்டது மட்டுமல்லாமல், வெற்றி பெற்றவர்களிடம் இருந்து பல்வேறு நுண்ணறிவு களையும் நாங்கள்  கற்றுக் கொண்டோம்,”  என்று அவர் கூறினார்.

நான்கு குழந்தைகளைக் கொண்ட குடும்பத்தில்  தனி ஒரு தாயான பி. ராஜேஷ், 44, மருத்துவ உதவியாளராகவும் தனது மற்ற வேலையுடன், பெண்களுக்கான சாதாரண கால் சட்டைகள்  தைத்து விற்பதன் மூலம் இப்போது வருமானம் ஈட்ட முடியும் என்கிறார்.
சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவோர் மேம்பாடு (சித்தம்) வணிகப் பயிற்சித் திட்டம் இன்றி (Grow) இத்தொழிலை தான் எண்ணிப்பர்த்திருக்க முடியாது என்றார்.

சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவோர் மேம்பாடு (சித்தம்) வணிகப் பயிற்சித் திட்டத்தில் (Grow) பங்கேற்பாளர் பி. ராஜேஷ், 44.

“தையல் ஆசிரியர்கள் மற்றும் சித்தம் ஆகியோரின் வழிகாட்டுதல் இல்லாமல், நான் துணிகளை விற்கவோ அல்லது கூடுதல் வருமானம் ஈட்ட தைக்க தெரிந்திருக்க மாட்டேன்,” என்று அவர் கூறினார்.

40 வயதான  ஒரு  குடும்ப பெண் ஆர். குணசுந்தரி, தற்போது வீட்டில் இருந்தே துணிகளுக்கு  ஒட்டு போடுவது, மடித்து தைத்தல் அல்லது ஆடைகளுக்கு சிறு மாற்றங்களை  செய்யும் சிறிய  அளவில்  தொழிலைத் தொடங்கி உள்ளதாகக் கூறினார்.
“இப்போது  தான் பெற்ற பயிற்சியின் விளைவாக வீட்டில் ஒரு பிரத்தியேக  இடத்தை தையலுக்கு ஏற்படுத்தியிருக்கிறேன்   என்றார், மேலும் தங்கள் ஆடைகளுக்கு  சிறு மாற்றங்களை  செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களையும்  தாம் வரவேற்கிறேன்,” என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவோர் மேம்பாடு (சித்தம்) வணிகப் பயிற்சித் திட்டத்தில் (Grow) பங்கேற்பாளர் ஆர். குணசுந்தரி, 40.

சித்தம் செப்டம்பர் 2019 இல் தொடங்கப்பட்டது, வழிகாட்டுதல், மானியங்கள் மற்றும் வணிக உபகரணங்களை வழங்குவதன் மூலம் ஆர்வமுள்ள இளம் வணிகர்களை மேம்படுத்துவதை  குறிக்கோளாக கொண்டு சித்தம் செயல்படுகிறது.

தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு தேவையான நான்கு யுக்திகள் திறன் மேம்பாட்டு பயிற்சி,  உற்பத்தி படிப்புகள், வளர்ச்சி மற்றும் வணிக உபகரண உதவிகளை வழங்கி அவர்கள் குறிக்கோளை அடைய, வாழ்வை வளப்படுத்த  யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் பாடுபடுவதற்கு சான்றாகும் என்கிறார்  (சிந்தம்) நிர்வாக அதிகாரி ஜான் பெர்னாண்டஸ்,


Pengarang :