SELANGOR

பழைய பொருட்களை இலவசமாக அப்புறப்படுத்த வாய்ப்பு

ஷா ஆலம், ஜன 23: ஜனவரி 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் செலாயாங்கில் வசிப்பவர்கள் 10 இடங்களில் பழைய பொருட்களை இலவசமாக அப்புறப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு தளவாடப் பொருட்கள், மின்சாதனங்கள் மற்றும் பல வகையான பழைய பொருட்களை அப்புறப்படுத்தும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செலாயாங் நகராண்மை கழகம் தெரிவித்துள்ளது.

“KDEB Waste Management (KDEBWM) உடன் இணைந்து சீன புத்தாண்டுக்கு தயாராகும் வகையில் பயன் படுத்தப்பட்ட தளவாடப் பொருட்கள் மற்றும் பழைய மின்சாதனங்களைப் பொதுமக்கள் அப்புறப்படுத்த உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இத்திட்டம்.

“மேலும் தகவல்களுக்கு தயவுசெய்து www.mps.gov.my ஐப் பார்வையிடவும் அல்லது திடக்கழிவு மற்றும் சுகாதார மேலாண்மைத் துறையை (JPSPK) 03-6126 6024 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டது.

எம்பிஎஸ்யால் நியமிக்கப்பட்ட 10 இடங்கள்:

கம்போங் சுங்கை தெராந்தாங்

கம்போங் லீ கிம் சாய்

கம்போங் சுங்கை பாகாவ்

பத்து ஆராங் (வடக்கு சந்திப்பு)

கம்போங் டேசா அமான்

ஜாலான் SJ 24, தாமான் செலாயாங் ஜெயா

ஜாலான் 19, தாமான் ஸ்ரீ மெலாத்தி

தாமான் டாயா (திடல் அருகே)

டேசா ஜெயா

ஜாலான் 19, கம்போங் செலாயாங் பாரு (கூடைப்பந்து மைதானம்)


Pengarang :