ECONOMYMEDIA STATEMENTNATIONAL

பன்முக கலாச்சாரத்தின் முன்மாதிரியாக சிலாங்கூர் விளங்குவதை தைப்பூச விழா புலப்படுத்துகிறது- மந்திரி புசார் பெருமிதம்

ஷா ஆலம், ஜன 26 – சிலாங்கூர் பன்முகக் கலாச்சாரத்தின் முன்மாதிரி மாநிலமாகத் விளங்குகிறது என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்ட பத்துமலை,  ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலய  தைப்பூசக் கொண்டாட்டம் இதனைப் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது அவர் சொன்னார்.

லட்சக்கணக்கான இந்து பக்தர்கள் நேற்றிரவு தைப்பூச விழாவை கொண்டாடுவதை நான் கண்டேன். சிலாங்கூர் பல இன மற்றும் பல சமயத்திற்கான  முன்மாதிரியாக விளங்குகிறது. இங்கு மக்கள் பரஸ்பர மரியாதையுடன் நல்லிணக்கத்துடனும் அமைதியுடனும் வாழ்கின்றனர்.

ஒற்றுமையே நிலைத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் அடித்தளம் என்பதை சிலாங்கூர் மக்கள் நிரூபித்துள்ளனர். சிலாங்கூர் குடிமக்கள், குறுகிய மற்றும் காலாவதியான கோஷங்களில்  ஈடுபடும் தீவிரவாதிகள் மற்றும் பழமைவாதிகளை நிராகரிக்கிறார்கள் என்று அவர் சமூக ஊடக தளமான எகஸில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறினார்.

சிலாங்கூர் ஒரு உலகளாவிய ஈர்ப்பாக உள்ளதோடு சிறந்து விளங்க தொடர்ந்து பாடுபடுகிறது என்றும் அமிருடின் மேலும் சொன்னார்.

கடந்த வியாழக்கிழமை இரவு பத்துமலைத் திருத்தலத்தில் நடை பெற்ற மாநில நிலையிலான தைப்பூச விழாவில் உரையாற்றிய அமிருடின், இன உறவுகளை வலுப்படுத்துவதில் பன்முக கலாச்சாரம் நிறைந்த  சமூகத்தினரிடையே பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் இருக்க வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்தினார்.

பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் தங்கள் நம்பிக்கையை எந்தவித இடையூறும் இன்றி கடைப் பிடிப்பதையும் சுதந்திரமாக இருப்பதையும் உறுதி செய்வதே எங்கள் அர்ப்பணிப்பு என்று அவர் கூறினார்.


Pengarang :