ECONOMYMEDIA STATEMENTNATIONAL

திறந்த வெளியில் தீயிட்டக் குற்றத்திற்கு குடியிருப்பாளருக்கு அபராதம்- எம்.பி ஏ.ஜே. நடவடிக்கை

ஷா ஆலம், ஜன 26-  திறந்த வெளியில் தீயிடல் நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அம்பாங், புக்கிட் அந்தாரபங்சாவில் உள்ள ஒரு குடியிருப்பின் உரிமையாளருக்கு எதிராக அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் உடனடியாக நடவடிக்கை எடுத்தது.

நேற்று முன்தினம்  முதல் காகிதம் எரிக்கப்படுவதாக புகார்கள் வந்ததையடுத்து அந்த பகுதியைத்   தாங்கள் மூடியதாக நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.

கடந்த  24 ஆம் தேதி  இரவு 11 மணி முதல்  மறுநாள் அதிகாலை 2 மணி வரை   ஜாலான் வாங்சா 5ஏ,  புக்கிட் அந்தாராபங்சாவிற்கு அடுத்துள்ள திறந்தவெளி பகுதியில்  தீயிடல் சம்பவம் நிகழ்ந்ததாக புகார் செய்யப்பட்டது.

இது ஒரு சட்டவிரோத நடவடிக்கை என்பதோடு   நகராண்மைக்கழகத்தின் அனுமதியும் பெறப்படவில்லை.  புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நேற்று  காலை 8.15 மணிக்கு அந்த இடத்திற்குச் சென்றனர். திறந்த வெளியில்  பெரிய அளவில் காகிதம் எரிக்கப்பட்டதற்கான அடையாளங்கள்  இருப்பதைக் கண்டனர் என்று அது கூறியது.

2007ஆம் ஆண்டு (எம்.பி.ஏ.ஜே.) குப்பை சேகரிப்பு, அகற்றல், அழித்தல் சட்டம் மற்றும்
1976 ஆம் ஆண்டு ஊராட்சி மன்றச் சட்டத்தின் 82வது பிரின் கீழ் சம்பந்தப்பட்ட நபருக்கு
அபராதம் விதிக்கப்பட்டது என அது குறிப்பிட்டது.


Pengarang :