ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONAL

நான்கு மாநிலங்களில் உள்ள 19 நிவாரண மையங்களில் 1,684 பேர் அடைக்கலம்

கோலாலம்பூர், ஜன 28- இன்று அதிகாலை 6.00 மணி நிலவரப்படி திரங்கானு, பகாங், கிளந்தான், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் உள்ள 19 தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் 1,684 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திரங்கானு மாநிலத்தில் மிக அதிகமாக 1,378 பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் கூறியது. அவர்கள் அனைவரும் டுங்குன் மாவட்டத்தில் உள்ள 14 துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.

ஜோகூர் மாநிலத்தின் கோத்தா திங்கி மற்றும் மெர்சிங் ஆகிய  மாவட்டங்களில் 235 பேர் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள வேளையில் கிளந்தான் மாநிலத்தின் தானா மேரா மாவட்டத்திலுள்ள  ஒரு நிவாரண மையத்தில் 43 பேரும் பகாங் மாநிலத்தின் ரொம்பின் மாவட்டத்திலுள்ள ஒரு மையத்தில் 28 பேரும் தங்க அடைக்கலம் நாடியுள்ளனர்.

ஜோகூர், கெடா, கிளந்தான், பகாங், பெர்லிஸ், சபா மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் சில ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவு மற்றும் பாலம் உடைந்தது உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுவதும் உள்ள 34 சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக நட்மா தெரிவித்தது.


Pengarang :