SELANGOR

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய், மின்னணு கழிவுகளை சேகரிப்பதற்கான  முகப்பிடம்   திறப்பு – எம்பிஏஜே

ஷா ஆலம், பிப் 1: எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் மின்னணு கழிவுகளை சேகரிப்பதற்கான  முகப்பிடம் (கவுண்டர்களை) காலை 9 மணி முதல் 11 மணி வரையும், 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும் அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் திறக்கும்.

சூராவ் அல்-முஸ்தகிம் கிராமட் AU5, சுராவ் அல்-ஃபலா கிராமட் AU4, பிகே என்எஸ் கிராமட் பிளாட் AU1B/1 மற்றும் தாமான் கிராமட் AU1 காவல்துறையினர் குவார்ட்டர்ஸ் ஆகிய இடங்களில்  முகப்பிடம் ( கவுண்டர்கள்) திறக்கப்படும் என மக்கள் தொடர்பு பிரிவு மற்றும் எம்பிஏஜே செயலகம் தெரிவித்தது.

“மக்கள் பயன்படுத்திய சமையல் எண்ணெய் மற்றும் மின்-கழிவுகளை அந்தந்த குடியிருப்பு பகுதிகளில் எளிதாக அகற்றுவதற்காக எம்பிஏஜே இந்த கவுண்டர்கள் திறந்துள்ளது.

“சமையல் எண்ணெயை கட்டுப்பாடில்லாமல் அகற்றுவதால் நீர் மாசுபடுவதை தடுக்க இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. அதே நேரத்தில் மின் கழிவுகளில் ஆபத்தான நச்சுப் பொருட்கள் உள்ளன, அவை முறையாக அகற்ற படாவிடில் சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும்” என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் குறிக்கோளுக்கு ஏற்ப சமூகத்தின் ஒத்துழைப்பின் விளைவாக 114 டன் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் 16 டன் மின் கழிவுகள் உள்ளாட்சி நிர்வாகத்தால் வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டன.

ஜனவரி 21 அன்று, அல்-இமாம் மஸ்ஜித் மற்றும் கெமென்சா வில்லா கொண்டோமினியத்தில் எம்பிஏஜே ஏற்பாடு செய்த திட்டத்தின் மூலம் 195.7 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் 392.20 கிலோகிராம் மின் கழிவுகள் வெற்றிகரமாகச் சேகரிக்கப்பட்டன.

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிப்பு கவுண்டர் மற்றும் மின்-கழிவு சேகரிப்பு பற்றிய கூடுதல் தகவல்களை பெற, பொதுமக்கள் எம்பிஏஜேயின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தைப் பார்வையிடலாம் அல்லது எம்பிஏஜேயின் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையை 03-4285 7007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :