ANTARABANGSA

மியன்மாரில் அவசரகாலம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு

யாங்கூன், பிப் 1 – மியன்மாரின் தேசிய தற்காப்பு மற்றும் பாதுகாப்பு மன்றம் (என்.டி.எஸ்.சி.) நாட்டின் அவசரகால நிலையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்துள்ளதாக அதன் தகவல் குழு தெரிவித்துள்ளது.

அவசரகால நிலையை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பது தொடர்பான முடிவை அந்நாட்டின் இடைக்கால அதிபர்  யு மியிண்ட்  சுயி என்.டி.எஸ்.சி கூட்டத்தில்  அறிவித்ததாக ஷின்ஹூவா செய்தி நிறுவனம் கூறியது.

மியன்மார் நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் 425வது பிரிவின்படி இந்த நீட்டிப்பு செய்யப்பட்டது.

தொலைத்தொடர்பு மோசடிகளைத் தடுப்பது, நாட்டின் வளர்ச்சி,  கல்வித் துறையை மேம்படுத்துதல், பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடு, தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான தயார்நிலை ஆகிய விஷயங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மியன்மார்  நாட்டில் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி தொடங்கி  ஒரு வருடத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பின்னர் அது இந்த ஆண்டு ஜனவரி 31 வரை நான்கு முறை நீட்டிக்கப்பட்டது.


Pengarang :