NATIONAL

பிப்ரவரி முதல் தேதி வரை ‘பாடு‘ தரவுத் தளத்தில் 23.8 லட்சம் பேர் பதிவு

கோலாலம்பூர், பிப் 2-‘ பாடு‘ எனப்படும் முதன்மை தரவுத் தளத்தில் நேற்று
வரை மொத்தம் 23 லட்சத்து 80 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளதாக அந்த
தரவுத் தளத்தின் மேலாண்மை வட்டாரம் கூறியது.

கடந்த மாதம் 2ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட இந்த தரவுத் தளத்திற்கு மலேசிய மக்கள்
அளித்து வரும் ஆதரவுக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
என்று ‘பாடு‘ தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

இந்த தரவுத் தளத்தில் பதிவு செய்தவர்கள் எண்ணிக்கையில் சிலாங்கூர்
தொடர்ந்து முதலிடம் வகிப்பதை அந்த பேஸ்புக் பக்கத்தில்
வெளியிடப்பட்ட தகவல் வரைபடம் காட்டியது.

சிலாங்கூரில் 3.8 லட்சம் பேரும் சரவா மாநிலத்தில் 3.1 லட்சம் பேரும்
ஜோகூரில் 2.4 லட்சம் பேரும் பேராக் மற்றும் சபாவில் தலா 2.1 லட்சம்
பேரும் இந்த ‘பாடு‘ தரவுத் தளத்தில் பதிவு செய்துள்ளனர்.

மேலும், கெடா மற்றும் கிளந்தான் மாநிலங்களில் தலா 1.6 லட்சம் பேரும்
திரங்கானுவில் 1.3 லட்சம் பேரும், பகாங் மற்றும் கோலாலம்பூரில் தலா
1.2 லட்சம் பேரும் பினாங்கில் 1.1 லட்சம் பேரும் மலாக்காவில் 70ஆயிரம்
பேரும் பெர்லிசில் 30 ஆயிரம் பேரும் லபுவான் மற்றும் புத்ரா ஜெயாவில்
தலா 10,000 பேரும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ‘பாடு‘ முதன்மை தரவுத் தளத்தில் பதிவு செய்வதற்கான இறுதி நாள்
மார்ச் 31ஆம் தேதியாகும். பொது மக்கள் www.padu.gov.my என்ற அகப்பக்கம்
வாயிலாகப் ‘பாடு‘ தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.


Pengarang :