ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சீன பெருநாளைக் கொண்டாடும்  கோத்தா கெமுனிங்  சட்டமன்றத்தை சார்ந்த  400 குடும்பங்களுக்கு வவுச்சர்கள் !

ஷா ஆலம், 4 பிப்ரவரி : கோத்தா கெமுனிங் சட்டமன்றத்தை சார்ந்த (DUN) மொத்தம் 400  சீனப் புத்தாண்டை கொண்டாடும்  மக்கள் ஷாப்பிங் வவுச்சர்களை பெற்றனர்.

அவர்கள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பிரகாஷ், மாநில அரசின் பங்களிப்பாக ரிங்கிட் 200 வழங்கினார். இது  பெருநாளுக்குத் தயாராகும் அவர்களின் சுமையைக் குறைக்கும் என்றார்.

“இந்த ஆண்டு சீனப் புத்தாண்டுக்கான தயாரிப்பில் பெறுநர் களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு  ஸ்ரீ மூடா  மைடின் பேரங்காடியின் ஒத்துழைப்பு தங்களுக்கு கிடைத்ததாக கூறினார்.

இந்த நன்கொடை மூலம், விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியும் என நம்புகிறேன்,” என்றார். முன்னதாக அவர் புத்ரா ஹைட்ஸ் சமூக பூங்கா திறப்பு விழா, சுபாங் ஜெயா மற்றும் சுபாங் ஜெயா சிட்டி கவுன்சிலின் (MBSJ) வாகன இல்லா தினத்தில் இன்று கலந்து கொண்டார்.

சீன மக்களுடன் நல்லுறவை  பேணும் வண்ணம் இன்று மாலை கோத்தா கெமுனிங் கூடைப்பந்து மைதானத்தில் சீனப் புத்தாண்டு திறந்த இல்லத்தையும் தனது கட்சி ஏற்பாடு செய்துள்ளதாக பிரகாஷ் கூறினார்.

இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் திறந்த  இல்லத்தில் கலந்து கொள்ளுமாறு அருகில் வசிப்பவர்களை அவர் அழைத்தார்.

முன்னதாக, டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, இந்த ஆண்டு சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு 23,900 லெட்ஸ் ஷாப்பிங் வவுச்சர்களுக்கு மாநில அரசு RM4.78 மில்லியன் வழங்குவதாகக் கூறினார்.

சிலாங்கூர் பட்ஜெட் 2024, ஹரி ராயா ஐடில்பித்ரி, சீனப் புத்தாண்டு மற்றும் தீபாவளி கொண்டாட்ட ங்களின் போது 82,400 பெறுநர்களைச் உள்ளடக்கிய ஜோம் ஷாப்பிங் வவுச்சர்களுக்கு RM16.48 மில்லியன் ஒதுக்குகிறது.

விண்ணப்ப நிபந்தனைகளில் மாதத்திற்கு RM3,000 க்கும் குறைவான  வீட்டு வருமானமும், சிலாங்கூர் வாசிகளாக இருக்க வேண்டும் என்பது அடங்கும்.


Pengarang :