SELANGOR

சாலை நெரிசலை சமாளிக்க ஜாலான் தெலோக் கோங்கில் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்

கிள்ளான், பிப் 5: ஜாலான் தெலோக் கோங்கில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும். அத்திட்டம் நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என போர்ட் கிள்ளான் மாநில சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

க்ளென்மேரி கோவ் சந்திப்பில் இருந்து லீ மின் தேசிய வகை சீனப் பள்ளி (எஸ்ஜேகேசி) வரை ஒருவழிச்சாலை சேர்க்கப்படும் என்று அஸ்மிசாம் ஜமான் ஹுரி கூறினார்.

“தெலோக் கோங்கின் முக்கிய வழித்தடங்களில் ஒன்று சாலை என்பதைக் கருத்தில் கொண்டு, திட்டத்தைச் செயல்படுத்தும்போது பொதுமக்களின் பயணம் தடைபடாமல் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்.

 “மேலும், தெலோக் கோங் குடியிருப்பாளர்களுடன் கலந்துரையாடுமாறு ஜேகேஆர் சிலாங்கூர் நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டேன்,“ என்றார்.

சுமார் 198 மில்லியன் ரிங்கிட் தேவைப்படும் இத்திட்டத்தின் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும் என்று அஸ்மிசாம் நம்புகிறார்.

“தெலோக் காங்கைச் சுற்றியுள்ள சாலைகள் அதிக போக்குவரத்து நெரிசலைக் கொண்ட சாலைகளில் ஒன்றாகும். பாதைகளை அதிகரிப்பது மூலம் நெரிசல் சிக்கலைச் சமாளிக்கும் முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் கூறினார்.


Pengarang :