SELANGOR

பறவை இரைச்சல் புகார்களைத் தொடர்ந்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது – எம்பிகேஎஸ்

ஷா ஆலம், பிப் 5: குடியிருப்பாளர்களிடமிருந்த பெறப்பட்ட பறவை இரைச்சல் புகார்களைத் தொடர்ந்து கோலா சிலாங்கூர் நகராண்மை கழகம் (எம்பிகேஎஸ்) 11 பூரோங் வாலிட் வளாகத்தில் உள்ள ஒலிபெருக்கிகளைக் கைப்பற்றியது.

ஜனவரி 31 அன்று பெஸ்தாரி ஜெயா மற்றும் தாமான் ஈஜோக் உத்தாமா வணிக மையங்களில் ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என உள்ளூர் அதிகார சபை தெரிவித்தது.

“பூரோங் வாலிட் வளாகத்தின் உரிமையாளர்கள் ஏற்படுத்தும் சத்தம் அருகிலுள்ள குடியிருப்பாளர்களுக்கு தொந்தரவாக இருப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

“மொத்தம் 11 வளாகங்களின் ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் எம்பிகேஎஸ் அமலாக்கத் துறையின் ஸ்டோர் அறைக்கு மேல் நடவடிக்கைக்காகக் கொண்டு செல்லப்பட்டன,” என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், எழுத்துப்பூர்வ அனுமதியின்றி கடை கட்டிடங்களை மாற்றி அமைத்தக் குற்றத்திற்காக சட்டம் 133 இன் பிரிவு 70 (11) இன் கீழ் எம்பிகேஎஸ் 11 அபராதங்களையும் வழங்கியது.

காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்ற இந்த சோதனை நடவடிக்கையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 17 எம்பிகேஎஸ் ஊழியர்கள் ஈடுபட்டனர்.


Pengarang :