ANTARABANGSA

காஸாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு தொடங்கியதிலிருந்து 123 பத்திரிகையாளரகள் கொல்லப்பட்டுள்ளனர்

அம்மான், பிப் 7- காஸா மீதான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு
தொடங்கியதிலிருந்து 123 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக்
காஸா பகுதியிலுள்ள அரசாங்கம் அலுவலகத்தை மேற்கோள் காட்டி
ஜோர்டானிய ஊடக நிறுவனம் (பெட்ரா) செய்தி வெளியிட்டுள்ளது.

காஸா பகுதியிலுள்ள பாலஸ்தீன தகவல் மையத்தின் இயக்குநரும்
ஊடகவியலாளருமான டாக்டர் ரிஸாக் அல்-கராஃபி வீரமரணம்
அடைந்ததைத் தொடர்ந்து இந்த அறிக்கையை அந்த அலுவலகம்
வெளியிட்டது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் காஸா மீது இஸ்ரேல்
மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களில் இதுவரை 27, 585 பேர்
கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் காரணமாகக் காஸா மக்களில் 85 விழுக்காட்டினர் உணவு,
சுத்தமான நீர், மருந்து உள்ளிட்டதேவைகள் கிட்டாத நிலையில் கட்டாய
இடப் பெயர்வுக்கு ஆளாகியுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள 60 விழுக்காட்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன
அல்லது தரைமட்டமாகியுள்ளன என்று ஐ.நா. கூறியது.


Pengarang :