Majlis perasmian CNY Lantern & Floral Festival di FGS Dong Zen Temple, Jenjarom, Kuala Langat pada 7 Februari 2024. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சீனப் புத்தாண்டு: மக்களுக்கு  தொடர்ந்து வெற்றியையும், தைரியத்தையும் வழங்கும்-மந்திரி புசார்

ஷா ஆலாம், 10 பிப்ரவரி: இந்த சீனப் புத்தாண்டு  டிராகனின் தைரியத்தையும்,  வெற்றியையும் மக்களுக்கு வழங்கும் என்றும் அதை அடைய  அனைத்து மக்களும் தொடர்ந்து ஆர்வத்துடன், தயாராக இருப்பார்கள் என்று டத்தோ மந்திரி புசார் நம்புகிறார்.

இந்த முறை சீன சந்திர நாட்காட்டியின்படி, டிராகன் ஆண்டு, சமூகத்திற்கு வலிமை, மரியாதை, வெற்றி மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளத்தை குறிப்பதாக உள்ளது. ஆகவே எல்லா மக்களுக்கும் சிறப்பை, வெற்றியை வழங்கட்டும் என  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வாழ்த்தினார்.

“டிராகன் ஆண்டு பிறப்பு,  சீன நாகத்தின்  குணபாண்மையை  இவ்வாண்டு முழுவதும் மக்களும்  பெற வேண்டும்.  மக்களும் அம்மாதிரியான  உணர்வை, செயல்பாட்டைக் கொண்டு வெற்றி பெறவும்,  ஒரு டிராகனின் துணிச்சலைப் பெறவும் நாம்  தயாராக  இருப்போம்  வெற்றி பெறுவோம்  என்றார்.

“மாநில அரசு தேவைப்படுபவர்களுக்கு சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை  மேலும் குதூகலமாக்க   ஷாப்பிங் வவுச்சர்களை வழங்குகிறது. இந்த கொண்டாட்டத்தின் போது அவர்களுக்கு  மகிழ்ச்சி தரும் என்று நம்புகிறேன்,” என்று அவர் பேஸ்புக்கில் நம்பிக்கை தெரிவித்தார்.

அமிருடின், தியோங் ஹுவா (சீன) சமூகம் முழுவதற்கும் சீனப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அனைவருக்கும் ஏராளமான மகிழ்ச்சியையும் செழிப்பும் கிட்ட வாழ்த்தினார்.


Pengarang :