ANTARABANGSAMEDIA STATEMENTNATIONAL

இஸ்ரேலின் இனப் படுகொலை- 52 நாடுகள் அனைத்துலக நீதிமன்றத்தில் அறிக்கைத் தாக்கல்

இஸ்தான்புல், பிப் 11- ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் குற்றச்செயல்களின் விளைவுகள் மீதான விசாரணையில் துருக்கி உள்ளிட்ட 52 நாடுகளும் மூன்று அனைத்துலக ஸ்தபானங்களும் அனைத்துலக நீதிமன்றத்தில் (ஐ.சி.ஜே.) அறிக்கைத் தாக்கல் செய்யவுள்ளன.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதல்கள் மீதான சட்ட விளைவுகளை விசாரிப்பதற்கு வரும் 19 முதல் 26 வரை பொது விசாணை நடத்தப்படவுள்ளதாக அனைத்துலக நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையை மேற்கோள் காட்டி துருக்கிய ஊடகங்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளதாக தேசிய செய்தி நிறுவனமான  நினா கூறியது.

இந்த விசாரணையின் போது துருக்கி, அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகள் அமைப்பு, ஆப்பிரிக்க ஒன்றியம் உள்ளிட்ட 52 நாடுகள் அறிக்கையைத் தாக்கல் செய்யும் என்று அனைத்துலக நீதிமன்றம் கூறியது.

இந்த விசாரணையின் போது தொடக்க அறிக்கையை பாலஸ்தீனம் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி வழங்கவுள்ள நிலையில் நிறைவு அறிக்கையை மாலத் தீவு வரும் 26 ஆம் தேதி சமர்ப்பிக்கும்.

1948ஆம் ஆண்டு இனப்படுகொலை மாநாட்டின் கட்டமைப்புக்கு உட்பட்டு தென்னாப்பிரிக்கா கடந்த மாதம் கொண்டு வந்த வழக்கில் அனைத்துலக நீதிமன்றம் இந்த முடிவை அறிவித்தது.

பாலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும்படி அனைத்துலக நீதிமன்றம் இட்ட உத்தரவையும் மீறி அந்நாடு காஸா பகுதி மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.


Pengarang :